Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓட்டுநரில்லாமல் தானாக இயங்கும் காரை அறிமுகம் செய்த அமேசானின் ஜூக்ஸ்... அமேசானிடம் இப்படி ஒரு நிறுவனம் இருக்கா?
ஓட்டுநர் இல்லாமல் தானாக இங்கும் தன்னாட்சி காரை அமேசானின் ஜூக்ஸ் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானுக்கு சொந்தமான ஜூக்ஸ் (Zoox) அதன் ஓட்டுநர் இல்லா ரோபோ-டாக்சியை வெளியீடு செய்துள்ளது. தன்னாட்சி தொழில்நுட்ப வசதிக் கொண்ட இக்கார் எந்த திசையில் வேண்டுமானால் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

நான்கு பேர் அமர்ந்து செல்கின்ற வகையில் பெஞ்ச் ரக இருக்கைகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், ஓட்டுனருக்கென தனி இருக்கை மற்றும் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இது முழுக்க முழுக்க தன்னாட்சி தொழில்நுட்பத்தின் மூலமாக மட்டுமே இயங்கக் கூடிய வாகனம் ஆகும்.

அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ப இந்த ரோபோ டாக்சி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது 12 அடி நீளம் கொண்ட வாகனம் ஆகும். மினி கூப்பர் காரைக் காட்டிலும் சில அடிகள் மட்டுமே நீளம் குறைந்த காராக இது இருக்கின்றது.

ஜூக்ஸ் இந்த ரோபோ டாக்சி, ரிமோட் கார்களைப் போன்று இரு திசையிலும் நகரும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், நான்கு வீல்களுக்கும் திரும்பும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதனை பக்கவாட்டு பகுதியிலும் இயக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 75 மைல்கள் ஆகும்.

அப்படி என்றால் மணிக்கு 120 கிமீ வேகத்தில் இது இயங்கும். தற்போது இந்த ரோபோ டாக்சியை பல பரீட்சையில் ஈடுபடுத்தும் பணியில் ஜூக்ஸ் ஈடுபட்டு வருகின்றது. கலிஃபோர்னியாவின் பாஸ்டர் சிட்டியிலேயே இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று, லாஸ் வேகாஸ் மற்றும் சேன் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களிலும் ரோபோ டாக்சி சோதனைச் செய்யப்பட்டு வருகின்றது. விரைவில் இந்த நகரங்களிலேயே இந்த ஆளில்லா வாகனம் வாடகை வாகன சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றது.

ஜூக்ஸ் ஓர் ஆரம்பநிலை வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். 2014ம் ஆண்டே இந்த நிறுவனம் சிலிக்கான் வாலியில் தொடங்கப்பட்டது. இதனை நடப்பாண்டின் ஜூன் மாதத்திலேயே ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் கையகப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, தற்போது அமேசானின் ஆதரவுடன் அந்நிறுவனம் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. அமேசான் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இது இருந்தாலும், தற்போது அது சுந்திரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதனடிப்படையிலேயே புதிய ஜூக்ஸ் ரோபோ டாக்சி வெளியீடு உள்ளது.

இந்த வாகனத்தின் உட்புற பகுதி பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களில் இருப்பதைப் போன்று நட்சத்திர மின் விளக்கு அமைப்பு டாக்சியின் மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பயணிகளுக்கு பொழுதுபோக்குகின்ற தனி மியூசிக் சிஸ்டம் மற்றும் சொகுசான இருக்கை வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

உலகம் முழுவதிலும் தன்னாட்சி திறன் கொண்ட வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளன. இந்த தொழில்நுட்ப வசதிக் கொண்ட வாகனங்கள் மனித மூளையைக் காட்டிலும் அதி வேகத்தில் செயல்படக்கூடியவை என்பதால் அதிக பாதுகாப்புக் கொண்டவையாகக் கருதப்படுகின்றது. இதன்காரணத்தினலாயே உயர்ரக கார்களில் தன்னாட்சி தொழில்நுட்ப வசதியை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து, டாக்சி மற்றும் டெலிவரி போன்ற சேவையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களிலும் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.