ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

1935ம் ஆண்டில் விற்பனைச் செய்யப்பட்ட பழைய கார் ஒன்று மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு போயிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

வாகன பிரியர்கள் மத்தியில் பழைய விண்டேஜ் வாகனங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அதிலும், லக்சூரி விண்டேஜ் ரக வாகனங்களுக்கு சொல்லவே வேண்டாம், சற்று கூடுதலான வரவேற்பே வாகன ஆர்வலர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

இதனை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சம்பவமே தற்போது அமெரிக்காவில் அரங்கேறியிருக்கின்றது. 1935 டூசென்பெர்க் மாடல் ஜேஎன் கன்வர்டபிள் செடான் கார் 1.34 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகியிருக்கின்றது. இந்திய மதிப்பில் அது 9.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியிருக்கிறது.

ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற இந்த ஏலத்தில் அமெரிக்க ஏல நிறுவனம் ஒன்று இதன் வாயிலாக நல்ல லாபத்தை பார்த்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. மேலும், இதற்கு முன்னாடி நடைபெற்ற ஏலத்தை எல்லாம் இந்த ஏல நிகழ்வு முறியடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

அதாவது, அதிக விலைக்கு ஏலம்போன பழைய கார்கள் நிகழ்வுகளையெல்லாம் இந்த டூசென்பெர்க் கார் விற்பனை முறியடித்திருக்கன்றது. முன்னதாக 1956 மெர்சிடிஸ் பென்ஸ் 300எஸ்எல் குள்விங் 1,234,567 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகியிருந்தது.

ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

இது இந்திய மதிப்பில் ரூ. 9.1 கோடி ஆகும். இந்நிகழ்வு கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனை மிஞ்சும் வகையிலேயே சமீபத்திய டூசென்பெர்க் காரின் ஏலம் நடைபெற்றிருக்கின்றது. இந்த கார் 1913ம் ஆண்டிலேயே முதல் முறையாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

10 அலகுகள் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டன. இதில் ஒன்றே உலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் தற்போது ஏலத்தில் விற்பனையாகியிருக்கின்றது. இந்த காரில் 198கிலோ வாட்டை உருவாக்கக் கூடிய (265 குதிரை திறன்களுக்கு இணையான) 6.9 லிட்டர் லைகமிங் இன்லைன் 8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

இந்த எஞ்ஜின் 3 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இயங்கும். தொடர்ந்து, சொகுசான இருக்கை, இருக்கைகள் அனைத்திற்கும் லெதர் போர்வை என பல்வேறு பிரீமியம் அம்சங்கள் அந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், 17 இன்சிலான ஒயர் வீல்கள், வலது-இடது பக்கங்களில் இரு ஸ்பேர் வீல்கள் என கூடுதல் சிறப்ப வசதிகள் சிலவும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

ரூ. 9.9 கோடிக்கு ஏலம்போன ரொம்ப ரொம்ப பழைய கார்! ஒரே ஒரு காரணம்தான்! என்ன அது தெரியுமா?

டூசென்பெர்க் 1935 மாடலாக இருந்தாலும் அது பார்ப்பதற்கு தற்போதும் புதிதுபோல் காட்சியளிக்கின்றது. காரை வாங்கியவருக்கு அதன் ஆவணங்கள் மட்டுமின்றி கார் குறித்த சில பழை புகைப்படங்களையும் ஏல நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
1935 Duesenberg JN Convertible Sedan Sold For Rs.9.9 crore. Read In Tamil.
Story first published: Tuesday, June 29, 2021, 17:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X