விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்...

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கு சிறந்த வாகனங்களாக இவை செயல்படுகின்றன. இதன் காரணத்தினால்தான் உலகெங்கிலும் மின்சார வாகனங்கள் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற தொடங்கியிருக்கின்றன.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான மின்சார கார் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் மலிவு விலை மின்சார காரான டாடா நெக்ஸானே அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

2021 ஏப்ரல் மாதத்தில் டாடா நெக்ஸான் இவி ஒட்டுமொத்தமாக 525 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது. இந்த அதிக விற்பனை எண்ணிக்கையை அடுத்தே இக்கார் நாட்டின் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் என்ற பெறுமையைச் சூடியிருக்கின்றது.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் 749 மின்சார கார்கள் மட்டுமே 2021 ஏப்ரலில் விற்பனையாகியிருக்கின்றன. இதில், 525 யூனிட்டுகள் டாடா நெக்ஸான் இவி கார்களாகும். அதாவது, ஒட்டுமொத்த இந்திய மின்சார கார்கள் விற்பனையில் 70.1 சதவீத பங்கினை நெக்ஸான் இவி பிடித்திருக்கின்றது.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

இது ஒட்டுமொத்த இந்திய மின் வாகன சந்தைக்குமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார் பிடித்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 156 யூனிட்டுகள் கடந்த மாதத்தில் விற்பனையாகியிருக்கின்றன.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

இது 2021 மார்ச் மாதத்தைக் காட்டிலும் 48.5 சதவீதம் குறைவான விற்பனை விகிதம் ஆகும். 2021 மார்ச் மாதத்தில் 303 யூனிட் வரை இசட்எஸ் இவி விற்பனையாயிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, முதல் இடத்தைப் பிடித்திருக்கும் நெக்ஸான் இவி மின்சார காரும் 16.9 சதவீத விற்பனை வீழ்ச்சியைக் கடந்த மாதத் சந்தித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

மூன்றாவது இடத்தை டாடா டிகோர் இவி மின்சார கார் பிடித்திருக்கின்றது. இந்த ஒட்டுமொத்தமாக 73 யூனிட் வரை விற்றிருக்கின்றன. 2021 மார்ச் மாதத்தில் 73 யூனிட் வரை விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்திலேயே ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா இவி மின்சார் கார் இருக்கின்றது.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

ஒட்டுமொத்தமாகவே 2021 ஏப்ரலில் 12 யூனிட்டுகள் வரை மட்டுமே இக்கார் விற்பனையாகியிருக்கின்றது. ஆனால், மார்ச் மாத்தில் 11 யூனிட்டுகள் மட்டுமே இது விற்பனையாகியிருந்தது. ஆகையால், இந்த மின்சார கார்கள் பட்டியலில் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கும் ஒரே ஒரு மின்சார காராக கோனா இவி இருக்கின்றது.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

ஒட்டுமொத்தமாக 2021 மார்ச் மாதத்தைக் காட்டிலும் 2021 ஏப்ரலில் 26.5 சதவீதம் குறைவாகவே மின்சார கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த விற்பனை வீழ்ச்சிக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முழு முடக்கம் தீவிரப்படுத்தப்பட்டதே முக்கிய காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

விற்பனையில் கெத்துகாட்டும் டாடாவின் மலிவு விலை மின்சார கார்... இந்தியர்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... ஆச்சரியத்தில் போட்டி நிறுவனங்கள்...

Source: Autopunditz

மின்சார கார்களின் விற்பனை விபரத்தை பட்டியலாகக் கீழே காணலாம்.

எண் மாடல் ஏப்ரல்-21 மார்ச்-21 விற்பனை விகிதம் (%)
1 டாடா நெக்ஸான் இவி 525 632 -16.9
2 எம்ஜி இசட்எஸ் இவி 156 303 -48.5
3 டாடா டிகோர் இவி 53 73 -23.3
4 ஹூண்டாய் கோனா இவி 12 11 9.1
Most Read Articles
English summary
2021 April Passenger Electric Vehicle Sales Report. Read In Tamil.
Story first published: Thursday, May 20, 2021, 19:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X