மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிஎஸ்6 எஸ்யூவி வாகனம் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டமாக வலம் வந்துள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

ஜப்பானை சேர்ந்த இசுஸு மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் அனைத்து பயணிகள் வாகனங்களின் விற்பனையையும் நிறுத்தி கொள்ளவுள்ளதாக கடந்த ஆண்டில் அறிவித்திருந்தது. பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளினால் இசுஸு இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

ஆனால் அதேநேரம் டி-மேக்ஸ் எஸ்-கேப் மற்றும் ரெகுலர்-கேப் என்ற கமர்ஷியல் வாகனங்களை பிஎஸ்6 மாடல்களாக அப்டேட் செய்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிஎஸ்6 எஸ்யூவி வாகனம் சில பகுதிகள் மறைக்கப்பட்ட நிலையில் இந்திய சாலை ஒன்றில் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

சுமித் ஷிண்டே என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இதுதொடர்பான ஸ்பை படங்களில் வாகனம் முழுவதும் மறைக்கப்படாததால் சில விபரங்கள் நமக்கு தெரிய வருகின்றன. இந்த படங்களில் வாகனத்தின் பின்பக்கத்தில் ‘டிடிஐ' முத்திரையை பார்க்க முடிகிறது.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

இதனால் இந்த எஸ்யூவி வாகனத்தில் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டிருக்கலாம். பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டாலும், இந்த டீசல் என்ஜின் வழக்கமாக, அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

பிஎஸ்4 வெர்சனில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 132 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது. மேலும், இந்த டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டது.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

என்ஜின் அப்கிரேடை தவிர்த்து இந்த சோதனை டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனத்தின் வெளிப்புறம் மறைக்கப்படாததால், வெளிப்புற தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

இருப்பினும் உட்புறத்தில் பெரிய தொடுத்திரை, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், இரட்டை காற்றுப்பைகள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் மற்றும் எல்இடி விளக்குகள் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி!! டீசல் என்ஜின் உடன் தயாராகிறது...

இத்தகைய அப்கிரேட்களினால் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் எஸ்யூவி வாகனத்தின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் பிஎஸ்4 வெர்சன் ரூ.17 லட்சத்தில் இருந்து ரூ.19 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிஎஸ்6 வெர்சனின் அறிமுகம் இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
Upcoming Isuzu D-Max V-Cross BS6 SUV Spied Testing Once Again: Here's Everything You Need To Know!
Story first published: Saturday, March 27, 2021, 2:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X