2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

ஹோண்டா நிறுவனம் அதன் காம்பெக்ட் செடான் காரான அமேஸிற்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்கவுள்ளது. இந்த நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

அப்டேட் செய்யப்பட்ட அமேஸிற்கான முன்பதிவுகளை கடந்த வாரத்தில் இருந்து ஹோண்டா நிறுவனம் ஏற்று கொண்டுவருகிறது. இதற்கான டோக்கன் தொகையாக டீலர்ஷிப்களின் வாயிலாக மேற்கொள்பவர்களுக்கு ரூ.21,000-மும், ஆன்லைனில் மேற்கொள்பவர்களுக்கு ரூ.5,000-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

ஃபேஸ்லிஃப்ட் மாற்றாக ஹோண்டா அமேஸில் சில காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் பிரிவில் நிலவும் போட்டியினை சமாளிக்கும் விதத்தில் வழங்கப்பட உள்ளன. தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள படங்களின் மூலம் பார்க்கும்போது, 2021 அமேஸ் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட ரேடியேட்டர் க்ரில், ரீடிசைனிலான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய பம்பர் உடன் புத்துணர்ச்சியான முன்பக்கத்தை பெற்றுவரவுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

இவற்றுடன் முன்பக்கத்தில் புதிய ஃபாக் விளக்கிற்கான குழியையும் இந்த காம்பெக்ட் செடான் பெற்றுள்ளது. அமேஸின் க்ரில் பகுதியில் தற்போதைய தேன்கூடு வடிவிலான டிசைனிற்கு மாற்றாக, வெட்டப்பட்ட முறையிலான பேட்டர்ன் பளபளப்பான கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

இந்த பளபளப்பான கருப்பு நிறம் முன்பக்க பம்பரின் அடிப்பகுதியில் உள்ள மைய காற்று ஏற்பான் வரையில் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் முக்கிய ஹைலைட்டாக கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலமாக காஸ்ட்லீயான தோற்றத்தை பெற்றுள்ள அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் பக்கவாட்டில் கதவு கைப்பிடிகள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

பின்பக்கத்தில் பம்பரில் க்ரோம் கார்னிஷ் & பிரதிபலிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்சமயம் ஹோண்டாவின் இந்த சப்-4 மீட்டர் செடான் கார் ஐந்து விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அப்டேட் செய்யப்பட்ட அமேஸ் கூடுதலாக புதிய நிறத்தேர்வுகளை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

உட்புறத்தில் பளிச்சிடும் நிறத்திலான இருக்கைகள், சாடின் சில்வர் நிற தொடுதல்களுடன் திருத்தப்பட்ட வடிவத்தில் டேஸ்போர்டு, வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை கொண்ட அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் புதிய துணி மெத்தை உள்ளமைவுகளை அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரவுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

தொழிற்நுட்ப அம்சங்களாக 7-இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கும் திரை, உயரத்தை சரிச்செய்து கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை, சாவியில்லா நுழைவு, காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்வதற்கு அழுத்து பொத்தான், க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட உள்ளதாக கசிந்துள்ள விபரங்கள் தெரிவிக்கின்றன.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

இந்த வசதிகளை தற்போதைய ஹோண்டா அமேஸ் காரிலும் பார்க்க முடிகிறது. இவற்றுடன் காரின் பின்புறத்தை பல்வேறு விதமான கோணங்களில் காட்டக்கூடிய கேமிராவை அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் பிரத்யேகமாக பெற்று வருகிறது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

இதனால் 2021 அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரும் வழக்கம்போல் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஐ-டிடிஇசி டீசல் என்ஜின் தேர்வுகளில் தான் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

மறுபக்கம் டீசல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை காருக்கு அதிகப்பட்சமாக வழங்கக்கூடியதாக உள்ளது. இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

இதில் டீசல் என்ஜின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் 79 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறன் வரையில் வழங்குகிறது. உள்நாட்டு விற்பனைக்காக மட்டுமல்லாமல், வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் அமேஸ் காம்பெக்ட் செடான் கார்களை இந்தியாவில் ஹோண்டா தயாரிக்கிறது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இணையத்தில் கசிந்த விபரங்கள்

புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அமேஸ் செடான் காரின் விற்பனை 2018ஆம் ஆண்டில் இருந்து உள்ளது. எஸ்யூவி கார்கள் எழுச்சியால் அமேஸ் போன்ற செடான் கார்களின் விற்பனை கடந்த சில வருடங்களாகவே குறைந்து வருகிறது. இதனை சரிச்செய்யும் முயற்சியாகவே ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை அமேஸில் ஹோண்டா கொண்டுவருகிறது.

Most Read Articles

English summary
2021 honda amaze facelift brochure leaks new features detailed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X