கியா கார்னிவலுக்கு போட்டியாக தயாராகும் ஹூண்டாயின் கஸ்டோ எம்பிவி!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்தியா உள்பட ஆசிய நாடுகளின் சந்தைகளுக்காக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எம்பிவி கார் ஒன்றின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான காப்புரிமை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா கார்னிவலுக்கு போட்டியாக தயாராகும் ஹூண்டாயின் கஸ்டோ எம்பிவி!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் ஹேட்ச்பேக், எஸ்யூவி & செடான் என அனைத்து பிரிவுகளிலும் வலிமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

கியா கார்னிவலுக்கு போட்டியாக தயாராகும் ஹூண்டாயின் கஸ்டோ எம்பிவி!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

இருப்பினும் இந்த தென்கொரிய பிராண்டில் இருந்து கணக்கச்சிதமான எம்பிவி கார் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளதா என்றால் இல்லை என்பது தான் பதில். இப்படிப்பட்ட நிலையில் ஹூண்டாயின் புதிய ப்ரீமியம் எம்பிவி காரின் சில காப்புரிமை படங்கள் தற்போது ஃபோரும்ப்ரோ என்ற இணையத்தளத்தின் மூலமாக கிடைத்துள்ளன.

கியா கார்னிவலுக்கு போட்டியாக தயாராகும் ஹூண்டாயின் கஸ்டோ எம்பிவி!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

கஸ்டோ என அழைக்கப்படும் இந்த ஹூண்டாய் எம்பிவி கார் ஆசிய சந்தைக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் முதலாவதாக இந்த எம்பிவி கார் சீன சந்தையில் தான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏனெனில் அங்கு சில மாதங்களுக்கு முன்பு ஹூண்டாயின் வருங்கால எம்பிவி கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. கஸ்டோ, சீனாவின் பிஏஐசி மோட்டார் மற்றும் பீஜிங் ஹூண்டாய் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

கியா கார்னிவலுக்கு போட்டியாக தயாராகும் ஹூண்டாயின் கஸ்டோ எம்பிவி!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

அதேபோல் புதிய தலைமுறை கியா கார்னிவலின் ப்ளாட்ஃபாரத்தில் இந்த எம்பிவி கார் தயாரிக்கபடுவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி உண்மை என்பது போல் தான் தற்போது காப்புரிமை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

கியா கார்னிவலுக்கு போட்டியாக தயாராகும் ஹூண்டாயின் கஸ்டோ எம்பிவி!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

ஏனெனில் இந்த படங்களில் இருக்கும் காருக்கும் ஹூண்டாயின் கூட்டணி நிறுவனங்களுள் ஒன்றான கியா மோட்டார்ஸின் எம்பிவி மாடலான கார்னிவலின் புதிய தலைமுறைக்கும் இடையே பெரிய அளவில் ஒற்றுமை இருப்பதை பார்க்க முடிகிறது.

கியா கார்னிவலுக்கு போட்டியாக தயாராகும் ஹூண்டாயின் கஸ்டோ எம்பிவி!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

இருப்பினும் புதிய கியா கார்னிவல் காரை காட்டிலும் குறைவான விலையிலேயே கஸ்டோ எம்பிவி காரை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும். தோற்றத்தை பற்றி கூற வேண்டுமென்றால், இந்த காப்புரிமை படங்களில் கஸ்டோ கார் முன்பக்கத்தில் க்ரோம் உள்ளீடுகளுடன் பெரிய அளவிலான ரேடியேட்டர் க்ரில் அமைப்பை கொண்டுள்ளது.

கியா கார்னிவலுக்கு போட்டியாக தயாராகும் ஹூண்டாயின் கஸ்டோ எம்பிவி!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்த க்ரில் ஆனது ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களை கொண்ட கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப் ஜோடி உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர், ஃபாக் விளக்குகளுக்கான குழிகளின் லைனை க்ரோம் உடன் கொண்டுள்ளது.

பக்கவாட்டில் A-பில்லர் நன்கு அழுத்தப்பட்டதுபோல் அகலமான வடிவில் காட்சியளிக்கிறது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட சோதனை ஹூண்டாய் எம்பிவி கார் மாதிரியில் கார்னிவலை போன்று நகர்த்தும் விதத்திலான பின்பக்க கதவுகளை பார்க்க முடிந்தது.

உட்புறத்தில் ஹூண்டாய் கஸ்டோ செங்குத்தான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றுடன் மிகவும் ப்ரீமியம் தரத்தில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற எம்பிவி கார்களை போன்று இந்த ஹூண்டாய் எம்பிவி காரும் 6-இருக்கை, 7-இருக்கை மற்றும் 8-இருக்கை தேர்வுகளில் வழங்கப்படும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் அதிகப்பட்சமாக 237 பிஎச்பி மற்றும் 353 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

இந்தியாவில் இந்த எம்பிவி காரை அறிமுகப்படுத்துவது குறித்த எந்தவொரு நடவடிக்கையிலும் ஹூண்டாய் இதுவரையில் ஈடுப்படவில்லை.

Most Read Articles
English summary
2021 Hyundai Custo MPV Patent Images Leak, Exteriors Detailed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X