தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் எஸ்யூவி கார் லத்தீன் என்சிஏபி நடத்திய க்ராஷ் டெஸ்டில் (மோதல் ஆய்வில்) பூஜ்ஜியம் ஸ்டாரைப் பெற்று பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்று டக்சன் (Hyundai Tucson). அதிக விலைக் கொண்ட எஸ்யூவி காராகா இது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த காரை ஹூண்டாய் உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

இந்த நிலையிலேயே லத்தீன் என்சிஏபி (Latin NCAP) அமைப்பு இந்த டக்சன் எஸ்யூவி காரை விபத்து ஆய்விற்கு உட்படுத்தியது. காரின் பாதுகாப்பு திறன் குறித்து அறியும் பொருட்டு கார் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஹூண்டாய் டக்சன் மண்ணைக் கவ்வியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

ஆமாங்க, ஹூண்டாய் டக்சன் கார் பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. ஐந்திற்கு பூஜ்ஜியம் ஸ்டாரை இந்த கார் பெற்றிருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

அதேநேரத்தில் மிக சமீபத்தில் இதே டக்சன் கார் மாடலை யூரோ என்சிஏபி (Euro NCAP) அமைப்பு மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் டக்சன் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று அசத்தியது. இது ஒட்டுமொத்த டக்சன் பயனர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. இந்த நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் டக்சன் பற்றிய முரண்பாடன தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

அது எப்படி யூரோ என்சிஏபி நடத்தி மோதல் ஆய்வில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்ற ஹூண்டாய் டக்சன், லத்தீன் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் பூஜ்ஜியம் ஸ்டார்களைப் பெற்று மண்ணைக் கவ்வியிருக்கின்றது என பல கேள்விகள் எழுப்பியிருக்கின்றது. ஏதோ தவறு நடந்திருக்குமோ என்றெல்லாம்கூட நினைக்க வைத்திருக்கின்றது.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

ஆனால், நாம் சந்தேகித்த எதுவுமே இல்லை என்பதே நிஜம். யூரோ என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது டக்சன் கார் மாடலின் லேட்டஸ்ட் வெர்ஷன் ஆகும். ஆனால், லத்தீன் என்சிஏபி தற்போது பயன்படுத்தியிருப்பது பழைய 2021 வெர்ஷன் டக்சன் ஆகும். இதுவே மோதல் ஆய்வில் பூஜ்ஜியம் ரேட்டிங்கைப் பெற்று பெருத்த அவமதிப்பை நிறுவனத்திற்கு சேர்த்திருக்கின்றது.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

இந்த பாதுகாப்பற்ற வெர்ஷனே தற்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிலவற்றில் ஹூண்டாய் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நிறுவனம் புதிய தலைமுறை (ஐந்து ஸ்டார் பெற்ற) டக்சனை விற்பனைக்குக் களமிறக்க இன்னும் ஒரு சில ஆண்டுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, பாதுகாப்பற்ற இந்த வெர்ஷனை முடிந்தளவு சீக்கிரமே வெளியேற்றுங்க ப்ளீஷ் என வாகன பிரியர்களை நினைக்க வைத்திருக்கின்றது.

மோதல் ஆய்வின் வாயிலாக மார்பக பகுதி, தலை பகுதி மற்றும் கழுத்து பகுதிகளுக்கு கணிசமான பாதுகாப்பை வழங்கும் வகையில் டக்சன் அமைந்திருக்கின்றது. இருப்பினும், அது போதுமானதாக இல்லை. அதே நேரத்தில், மோதலின்போது காரின் உடல்பகுதி பெருமளவில் சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இதுபோன்ற குளறுபடிகளினாலேயே லத்தீன் என்சிஏபி ஹூண்டாய் டக்சனுக்கு ஐந்திற்கு பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

இந்தியாவில் பழைய தலைமுறை டக்சன் எஸ்யூவியே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதன் விலை ரூ. 22.69 லட்சம் ஆகும். இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். இதன் உச்ச நிலை வேரியண்டின் விலை ரூ. 27.47 லட்சமாக இருக்கின்றது. இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

தயவு செஞ்சி புதுச கொண்டாங்க... பாதுகாப்பே இல்லாத வெர்ஷனை இந்தியாவில் விற்கும் ஹூண்டாய்! விலை அதிகம் ஆனா பாதுகாப்பு இல்லையே!

புதிய தலைமுறை டக்சன் தற்போது வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது மிக விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தலைமுறை டக்சன் எஸ்யூவி கார் இந்திய சாலைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

Most Read Articles
English summary
2021 hyundai tucson suv gets 0 star safety rating in latin ncap crash test
Story first published: Saturday, December 11, 2021, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X