புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

2021 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், வரும் 8ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட 2021 வெர்ஷனை வரும் பிப்ரவரி 8ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று (பிப்ரவரி 5) வெளியிடப்பட்டது. இந்த புதிய மாடல் பல்வேறு வகைகயில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

2021 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரை, டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டிருக்கலாம். அதே சமயம் கேபினில் ஒரு சில வசதிகள் கூடுதலாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் கார் சந்தை மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து கொண்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சந்தையில் முதலில் நுழைந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி திகழ்கிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் இது மட்டும்தான்.

புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

இதுதவிர ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்டர் உள்ளிட்ட கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் அனைத்து கார்களுக்குமே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் விதிவிலக்கு அல்ல.

புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

தற்போதைய நிலையில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை பயன்படுத்தினால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனை செய்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் எம்ஜி மோட்டார் நிறுவனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம். அத்துடன் புதிய மாடல் வரவுள்ளதால், வரும் காலங்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்பலாம்.

புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது. அதே சமயம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் மேற்கண்ட இரண்டு கார்களுடன் ஒப்பிடும்போது, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை மிகவும் குறைவு.

புது எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவு பண்ணியிருக்கீங்களா? அப்போ வர்ற 8ம் தேதி வரைக்கும் பொறுங்க... ஏன் தெரியுமா?

மிகவும் விலை குறைந்த செக்மெண்ட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி நேரடி போட்டி கிடையாது. புதிய அப்டேட்கள் காரணமாக, 2021 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை உயர்த்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
2021 MG ZS Electric SUV India Launch Date Announced - Here Are All The Details. Read in Tamil
Story first published: Friday, February 5, 2021, 21:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X