Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த மாதமே அறிமுகமாகிறது டாடா சஃபாரி எஸ்யூவி... மிக குறைந்த முன் தொகையில் தொடங்கியது முன்பதிவு... எவ்வளவு?
டாடா நிறுவனத்தின் சஃபாரி எஸ்யூவி காருக்கான புக்கிங் தொடங்கியுள்ளது. இத்துடன் அதிகாரப்பூர்வ அறிமுகம் எப்போது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

டாடா நிறுவனத்தின் புதுமுக கார்களில் ஒன்று சஃபாரி எஸ்யூவி. இந்த காருக்கான புக்கிங்கையே டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ரூ. 30 ஆயிரம் முன் தொகையின் அடிப்படையில் இக்காருக்கான புக்கிங் நடைபெற்று வருகின்றது. அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக சஃபாரி காருக்கான புக்கிங் தொடங்கியிருக்கின்றது.

இந்த காரை வருகின்ற பிப்ரவரி 22ம் தேதி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அன்றையே தினமே காரின் டெலிவரி பணிகளும் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. ஆகையால், பிப்ரவரி 22ம் தேதி அன்று முதல் டாடா சஃபாரி கார் அதன் உரிமையாளர்கள் கைகளில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. தற்போது புக்கிங் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து டெஸ்ட் டிரைவ் வசதியும் தொடங்கப்பட்டிருக்கின்றது.

டாடா சஃபாரி கார் ஓர் ஏழு இருக்கை வசதிக் கொண்ட வாகனமாகும். இதனை தனது பிரபல எஸ்யூவி கார்களில் ஒன்றான ஹாரியர் எனும் மாடலைத் தழுவியே கட்டமைத்திருக்கின்றது டாடா. ஆகையால், இரு கார்களுக்கும் இடையே ஒத்துபோகக் கூடிய சில டிசைன் தாத்பரியங்களையும், அம்சங்களையும் காண முடியும். அதேசமயம், மிகப் பெரிய அளவிலான வித்தியாசங்களையும் இரு கார்களுக்கும் இடையே காண முடிகின்றது.

பிரமாண்ட தோற்றம், அதிக இருப்பிட வசதி என பல் அம்சங்கள் மிகப்பெரிய வித்தியாசங்களுடன் காட்சியளிக்கின்றது. இதில் ஒரே மாதிரியானதாக முக்கொம்பு வடிவிலான க்ரில், மின் விளக்குகள், முகப்பு பகுதி ஸ்டைல் மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்டவை காட்சியளிக்கின்றன. தொடர்ந்து, 8.8 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பிற சில தொழிற்நுட்ப கருவிகள் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன.

அதேசமயம் டாடா சஃபாரி காரில் முதல் முறையாக எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக் கருவி, இருக்கைகளுக்கான புதிய நிறம் வழங்குதல் போன்ற சில தனித்துவமான அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளும் காட்சியளிக்கின்றன. சொகுசு மற்றும் அதிக பாதுகாப்பான பயணத்தை விரும்புவோரைக் கவரும் நோக்கில் இதுபோன்ற கணிசமான அம்சங்களை டாடா இக்காரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காரின் விலை பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், தற்போது நிலவும் போட்டிகள் மற்றும் பிற காரணங்களால் இக்கார் ரூ. 15 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் 22ம் தேதி வெளியாக இருக்கின்றது.

டாடா சஃபாரி கார் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் எக்ஸ்இ வேரியண்டே ஆரம்பநிலை தேர்வாகும். இக்காரில் இரு ஏர் பேக், அனைத்து வீலிலும் டிஸ்க் பிரேக், இஎஸ்பி உடன் கூடிய ஹில் ஹோல்ட் மற்றும் ரோலோவர் மிடிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற இருக்கின்றன.

எக்ஸ்எம் மற்றும் இதற்கு மேலிருக்கும் வேரியண்டுகளில் பன்முக டிரைவிங் மோட்கள், தொடுதிரை வசதிக் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஐஆர்ஏ இணைப்பு வசதி, ஆர்18 அலாய் வீல்கள், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பிரீமியம் வசதிகள் இடம்பெறும்.

இதுபோன்ற கூடுதல் சிறப்பு அம்சங்களை உயர் நிலை மாடலான எக்ஸ்இசட் வேரியண்டில் நம்மால் பெற முடியும். அதிக விலைக் கொண்ட மாடலாக இது களமிறங்க இருப்பதால் எக்கசக்க பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் இதில் இடம்பெற இருக்கின்றன.

அந்தவகையில், ஜெனான் எச்ஐடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், டெர்ரயின் ரெஸ்பான்ஸ் மோட்கள், ஆறு ஏர் பேக், 8.8 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் மற்றும் சப் ஊஃபர் உள்ளிட்டவற்றை இக்காரில் பெற முடியும்.