புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா சஃபாரி கார் இந்திய சந்தையில் தற்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2021 டாடா சஃபாரி இந்திய சந்தையில் இன்று (ஜனவரி 26) முறைப்படி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவியின் மூன்று இருக்கைகள் கொண்ட வெர்ஷன்தான் தற்போது சஃபாரி என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

முதலில் கிராவிட்டாஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் சஃபாரி என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சஃபாரி காரின் உற்பத்தியை ஏற்கனவே தொடங்கி விட்டது.

புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா சஃபாரி கார் 6 மற்றும் 7 இருக்கை வெர்ஷன்களில் கிடைக்கும். ஹாரியர் எஸ்யூவியில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் புதிய டாடா சஃபாரி காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டாடா சஃபாரி காரில், 168 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கிடைக்கும்.

புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய சஃபாரி காரில், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் பெரிய பனரோமிக் சன்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா சஃபாரி காரில், 8.8 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. 7 இன்ச் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளேவுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் புதிய டாடா சஃபாரி பெற்றுள்ளது. XE, XM, XT, XT+, XZ, XZ+ ஆகிய வேரியண்ட்களில் புதிய டாடா சஃபாரி கிடைக்கும்.

புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா சஃபாரி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வரும் பிப்ரவரி 4ம் தேதிதான் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதே சமயம் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்கப்படும். டாடா ஹாரியர் எஸ்யூவியின் மூன்று இருக்கைகள் கொண்ட வெர்ஷன் என்றாலும், புதிய டாடா சஃபாரியின் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

இதன்படி க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய க்ரில் அமைப்பு, புதிய ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், ட்யூயல் டோன் மெஷின் கட் அலாய் வீல்கள் ஆகியவற்றை புதிய டாடா சஃபாரி பெற்றுள்ளது. பின் பகுதியை பொறுத்தவரை, எல்இடி டெயில்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா சஃபாரியில் ரூஃப்ரெயில்களும் வழங்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் புதிய அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக புதிய சஃபாரி காரையும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதன் விலை பிப்ரவரி 4ம் தேதி அறிவிக்கப்படும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலையை சரியாக நிர்ணயம் செய்தால், புதிய சஃபாரி பெறும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 26, 2021, 20:17 [IST]
English summary
2021 Tata Safari Unveiled In India; Launch On February 4 - Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+