Tata Tigor EV இன் ரேஞ்ஜ் திறன் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்! இத்தனை கிமீ போகுமா?

Tata Tigor EV எலெக்ட்ரிக் கார் விற்பனையாளர்களின் ஷோரூம்களுக்கு வர தொடங்கியிருக்கின்றது. அவ்வாறு ஷோரூமுக்கு வந்த ஓர் Tigor EV காரின் புகைப்படம், அதன் பயண தூரத்தின் ரகசியத்தை உடைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

Tata Motors அதன் 2021 Tigor EV எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்குவதற்கான அனைத்து பணிகளையும் ஏற்பாடு செய்துவிட்டது. இந்த கார் இம்மாதம் இறுதியில் (ஆகஸ்டு 31ம்) அறிமுகமாக இருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னரே இதனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தது Tata Motors.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

இந்த நிலையில் Tigor EV விற்பனையாளர்களின் ஷோரூம்களுக்கு வர தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி Tata கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

Tata நிறுவனம் Tigor EV எலெக்ட்ரிக் காரை அதன் Ziptron தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இந்த எலெக்ட்ரிக் கார் ஒரு முழுமையான சார்ஜில் 345க்கும் அதிகமான கீலோமீட்டர் தூரம் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் Tata Nexon EV எலெக்ட்ரிக் காரைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவேதான் இந்தியர்கள் மத்தியில் Tata Tigor EV எலெக்ட்ரிக் காருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

Tata நிறுவனம் Tigor EV எலெக்ட்ரிக் காரை கூடுதல் கவர்ச்சியான வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றது. வெளிப்புற உடல் பகுதியில் ஆங்காங்கே நீல நிற அக்செண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், பனி மின் விலக்கு, அலாய் வீல் என இன்னும் பல கவர்ச்சிகர அம்சங்கல் Tigor EV காரில் இடம் பெற்றிருக்கின்றன.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

தற்போது வெளியாகியிருக்கும் ஸ்பை படங்கள் வாயிலாக Tigor EV கார் குறித்து வெளிவரா சிறப்பு தகவல்கள் சில தற்போது வெளி வந்திருக்கின்றன. காரின் வெளிப்புறத்தைப் போன்று உட்புறத்தை காட்சிப்படுத்தும் வகையில் சில படங்கள் வெளியாகியிருக்கின்றன.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

அந்தவகையில், காரின் ஸ்பை படம் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைக் காட்சிப்படுத்தும் வகையில் வெளி வந்திருக்கின்றது. அந்த படத்தில் Tigor EV எலெக்ட்ரிக் கார் 59 சதவீதம் சார்ஜில் இருப்பதாகவும், அந்த சார்ஜ் அளவில் அக்கார் 204 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்றும் காட்டுகின்றது.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

எனவேதான் இந்த கார் முழுமையான சார்ஜில் 345க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்கும் என தற்போது உறுதியான தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், இதன் உண்மையான ரேஞ்ஜ் திறன் மற்றும் விலை உள்ளிட்ட முக்கிய தகவல்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

வரும் ஆகஸ்டு 31ம் தேதி அன்று அறிமுகத்தின்போது இதன் முக்கிய விபரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Tata Tigor EV எலெக்ட்ரிக் காரில் 300V நிரந்தர மேக்னட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின்சார திறனை 26 kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கும்.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

Image Courtesy: Instagram

மின் மோட்டார் அதிகபட்சமாக 74.78 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் இரண்டும் IP67 வாட்டர்-ப்ரூஃப் திறன் திறன் கொண்டவை ஆகும். Tata Tigor EV எலெக்ட்ரிக் காரை வழக்கமான சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் செய்கையில் 8.5 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

அதுவே அதி வேக சார்ஜ் மையங்களில் வைத்து சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திலே முழுமையான சார்ஜை ஏற்றிக் கொள்ளும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் தொழில்நுட்பமே இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. Tigor EV எலெக்ட்ரிக் காரில் மேலும் பல சிறப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

அந்தவகையில், 7 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐஆர்ஏ கார் இணைப்பு தொழில்நுட்பம் (இதன் வாயிலாக 30க்கும் அதிகமான அம்சங்களைக் கட்டுப்படுத்த முடியும்), பவர் அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம்கள் (இது தானாக மடித்து, விரிக்கும் திறன் கொண்டவை), தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், டிரைவருக்கான இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி என எக்கசக்க வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

Tata Tigor EV வழக்கமான எரிபொருளால் இயங்கும் Tata Tigor தோற்றத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், இது ஓர் மின்சார கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் சில முத்திரைகள் ஆங்காங்கே பதிக்கப்பட்டுள்ளன. அதாவது, EV எனும் எழுத்துக்கள் காரின் முன் மற்றும் பின் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

Tata Tigor EV இன் பயண தூரம் எவ்ளோ தெரியுமா? ஸ்பை படத்தால் வெளிவந்த ஆச்சர்ய தகவல்... அடேங்கப்பா இவ்ளோ ரேஞ்ஜ் தருமா!

இத்துடன் உருவத்திலும் லேசான மாறுபாடுகள், இது ஓர் எலெக்ட்ரிக் கார்தான் என்பதை வெளிக்காட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகையால், சாலையில் Tata Tigor EV செல்லும்போது தனியாக தெரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, August 21, 2021, 17:43 [IST]
English summary
2021 tata tigor ev spy pic reveals range details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+