ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

மிக குறைவான விலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

டாடா மோட்டார் நிறுவனம் 2021 டிகோர் எலெக்ட்ரிக் காரை (2021 Tata Tigor EV) வரும் ஆகஸ்ட் 31ம் தேதி (நாளை) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக 2021 டிகோர் எலெக்ட்ரிக் காம்பேக்ட் செடான் காரின் வேரியண்ட்கள் மற்றும் வண்ண தேர்வுகள் குறித்த விபரங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

XM, XZ+ மற்றும் XZ+ DT என மொத்தம் மூன்று வேரியண்ட்களில், 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காருக்கு தற்போது முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

அதே சமயம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் டெலிவரி பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ஒரே ஒரு வண்ண தேர்வில் மட்டுமே 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். இதன்படி டீல் ப்ளூ என்ற ஒரே ஒரு வண்ண தேர்வு மட்டுமே 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

அதே சமயம் விலை உயர்ந்த டாப் ட்யூயல்-டோன் வேரியண்ட் கருப்பு நிற மேற்கூரையை பெற்றிருக்கும். அதே நேரத்தில் 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் ஜிப்ட்ரான் பவர்ட்ரெயின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் கொடி கட்டி பறந்து வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிலும் ஜிப்ட்ரான் பவர்ட்ரெயின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 26kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 55kW எலெக்ட்ரிக் மோட்டாரும் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த எலெக்ட்ரிக் கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டி விடும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த காரின் பேட்டரியை வெறும் ஒரு மணி நேரத்துக்கு உள்ளாகவே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதே சமயம் வழக்கமான 15A சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு சுமார் 8.5 மணி நேரம் வரை ஆகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

ஆனால் 2021 டிகோர் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் எத்தனை கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என்பது) எவ்வளவு? என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது ரேஞ்ச் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

எனினும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 300 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரேஞ்ச் உடன் 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

அதே நேரத்தில் 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், கருப்பு நிற ஓஆர்விஎம்கள், புதிய முன்பக்க க்ரில் அமைப்பு, எல்இடி டெயில்லேம்ப்கள், சுறா துடுப்பு ஆன்டெனா, புதிய அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இதன் டிசைன் மிகவும் சிறப்பாக உள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

இதுதவிர 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஐரா கனெக்டட் தொழில்நுட்பம், 30க்கும் மேற்பட்ட கனெக்டட் வசதிகள், செல்போன் சார்ஜிங் போர்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும், 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

அதே சமயம் இந்த காரின் பூட் ஸ்பேஸ் 316 லிட்டர்கள் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த வகையில் 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரும் பாதுகாப்பு வசதிகள் நிரம்பியதாக உள்ளது. இதன்படி இந்த காரின் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்! மிக குறைவான விலையில் நாளை அறிமுகம்!

மேலும் இபிடி உடன் ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகளும் 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் இந்த காரின் விலை 10 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இது இருக்கும்.

Most Read Articles

English summary
2021 tata tigor ev variant colour options revealed here are all the details
Story first published: Monday, August 30, 2021, 21:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X