Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

2021 வால்வோ எக்ஸ்சி 90 (Volvo XC90) பெட்ரோல் மைல்டு-ஹைபிரிட் வசதிக் கொண்ட கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான வால்வோ (Volvo) அதன் எக்ஸ்சி (XC90) எனும் புதிய சொகுசு வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மிக சமீபத்தில்தான் இந்நிறுவனம் எக்ஸ்சி40 (XC40) மற்றும் எஸ்90 (S90) ஆகிய மைல்டு ஹைபிரிட் திறன் கொண்ட பெட்ரோல் காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

இந்த நிலையிலேயே நிறுவனம் தற்போது புதிய லக்சூரி சொகுசு கார் மாடலான எக்ஸ்சி90 பெட்ரோல் மைல்டு-ஹைபிரிட் ரக வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காருக்கு அறிமுக விலையாக ரூ. 89.90 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரம் மற்றும் குறைந்த மாசுபாட்டை வெளியேற்றும் வாகனங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில், வால்வோ நிறுவனம் தற்போது பெட்ரோல் - மைல்டு ஹைபிரிட் எஞ்ஜின் வசதிக் கொண்ட கார்களின் உற்பத்தியில் கவனத்தை செலுத்தி வருகின்றது.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே எக்ஸ்சி40 மற்றும் எஸ்90 ஆகிய மாடல்களையும், இதைத் தொடர்ந்து தற்போது எக்ஸ்சி90 கார் மடைலை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய எக்ஸ்சி90 ஓர் ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எஸ்யூவி ரக வாகனமாகும். எஸ்பிஏ (Scalable Product Architecture) யுக்தியைப் பயன்படுத்தி இக்காரை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. பெட்ரோல் மைல்டு-ஹைபிரிட் எக்ஸ்சி90, வால்வோ எக்ஸ்சி90 பி6 இன்ஸ்க்ரிப்ஷன் ட்ரிம்மில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

வால்வோ எக்ஸ்சி90 பெட்ரோல் மைல்டு-ஹைபிரிட் காரின் டிசைன்:

எக்ஸ்சி90 கார் முழுவதும் கவர்ச்சியான கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய க்ரில் மற்றும் தாழ்வான பம்பர் முன்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அக்காருக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றம் கொடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றால் முற்றிலும் புதுமையான டிசைன் அமைப்பை எக்ஸ்சி90 பெற்றிருக்கின்றது. இதற்கு முற்றிலும் புதிய தோற்றம் அலாய் வீல், எக்சாஸ்ட் பைப் மற்றும் அணிகலன்கள் ஆகியவையும் ஓர் காரணமாகும்.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

அதிலும் இதன் ஆர்-டிசைன் வேரியண்ட் கூடுதல் கவர்ச்சியான தேர்வாக உள்ளது. உயர் கிளாஸ் ரக வண்ண பூச்சு, டூர் மிர்ரர் கேசிங், விண்டோ ஃப்ரேம்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை இதில் வழங்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பன்முக அம்சங்களைக் கொண்டதாக எக்ஸ்சி 90 விற்பனைக்கு வந்திருக்கின்றது. க்ரிஸ்டல் வெள்ளை பியர்ல் (Crystal White Pearl), ஓனிக்ஸ் கருப்பு (Onyx Black), டெனிம் நீலம் (Denim Blue மற்றும் பைன் கிரே (Pine Grey) ஆகிய நிற தேர்வுகளிலேயே எக்ஸ்சி90 விற்பனைக்குக் கிடைக்கும்.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

சிறப்பம்சங்கள்:

வால்வோ எக்ஸ்சி 90 பெட்ரோல்-மைல்டு ஹைபிரிட் காரின் உட்பகுதியில் இரு விதமான யுஎஸ்பி போர்டுகள் ஸ்டாண்டர்டு வசதியாக வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், சென்சூஸ் 9 இன்சிலான மல்டிமீடியா தொடுதிரை (குரல் கட்டளை வசதி உடன்), நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் வால்வோ ஆன் கால் இணைப்பு வசதி உள்ளிட்டவையும் வழக்கமான அம்சங்களாக எக்ஸ்சி90 இல் இடம் பெற்றிருக்கின்றன.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

மேலும், பவர் ஆபரேட் வசதிக் கொண்ட டெயில்கேட், எல்இடி ஹெட்லைட், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் சாவியில்லா நுழைவு மற்றும் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. புதிய வால்வோ எக்ஸ்சி90 காரில் 1,969 சிசி திறன் கொண்ட பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Volvo XC90 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! இதோட ஸ்பெஷல் என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசப்படுவீங்க!

இந்த எஞ்ஜின் 300 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் அனைத்து வீல்களும் இயங்கும் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், மைல்டு ஹைபிரிட் வசதிக்காக 48 வோல்ட் பேட்டரி மற்றும் கெர்ஸ் (kinetic energy recovery system) மற்றும் இன்டெக்ரேடட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அம்சம் 15 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும். ஆகையால், கூடுதல் மைலேஜை இதில் பெற்றுக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 11, 2021, 18:18 [IST]
English summary
2021 volvo xc90 petrol mild hybrid launched in india here is price and full details
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+