2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற தோற்றம் புதிய ஸ்கெட்ச் படங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா உலகளவில் வருகிற நவம்பர் 30ஆம் தேதி அதன் பிரபல எஸ்யூவி மாடல்களுள் ஒன்றான கரோக்கின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை வெளியிட தயாராகி வருகிறது.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

இந்த நிலையில் தான் தற்போது இந்த ஸ்கெட்ச் படங்கள் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. புதிய கரோக் ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புற தோற்றத்தை வெளிக்காட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்கெட்ச் படங்களின் மூலம் தற்போதைய மாடலை காட்டிலும் மிகவும் நேர்த்தியான தோற்றத்தில் புதிய கரோக் வடிவமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

இருப்பினும் அதேநேரம் ஸ்கோடா கரோக்கிற்கு உண்டான பெட்டக வடிவம் அப்படியே தான் தொடரப்பட்டுள்ளது. காரின் வெளிப்பக்கத்தில் சுற்றிலும் வழங்கப்படும் லைன்கள் & க்ரீஸ்களின் டிசைன்கள் தான் தற்கால வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மெருக்கேற்றப்பட்டுள்ளன.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

இந்த வகையில், முன்பக்கத்தில் பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு முன்பை காட்டிலும் முரட்டுத்தனமான வடிவத்தில் இம்முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் புதிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள முன்பக்க பம்பர் முன்பக்கத்தில் இருந்து சற்று பக்கவாட்டு பகுதிகளுக்கும் வளைக்கப்பட்டுள்ளது.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

ஸ்கோடா கார்களுக்கே உண்டான பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் கரோக் ஃபேஸ்லிஃப்ட்டிலும் தொடரப்பட்டாலும், க்ரில் நிச்சயமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இதன் காரணமாகவே தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸ்கெட்ச் படங்களில் உள்ள கரோக் கார் பார்ப்போரை முறைப்பது போன்ற முன்பக்கத்தை பெற்றுள்ளது.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

பக்கவாட்டில் சக்கர வளைவுகள் கருப்பு நிற பிளாஸ்டிக் பேனல்களில் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் காரின் அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் இருப்பதையும் கூறியே ஆக வேண்டும். இவை தவிர்த்த கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் பக்கவாட்டு பகுதியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது போல் இந்த ஸ்கெட்ச் படங்களில் தெரியவில்லை.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

மேற்கூரை கம்பிகளும் வழக்கமான டிசைனிலேயே காட்சி தருகின்றன. பின்பக்கத்தில் டெயில்லேம்ப்கள் முன்பை காட்டிலும் கூர்மையான டிசைனில் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கோடா நிறுவனத்தின் லோகோ டெயில்கேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ‘SKODA' எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

பின்பக்கத்தில் மேற்கூரையில் பொருத்தப்படும் ஸ்பாய்லர் கூடுதல் கூர்மையானதாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸ்கெட்ச் படங்கள் கரோக் ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறத்தை விரிவாக காட்டியுள்ளன. இருப்பினும் காரின் உட்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை இவற்றின் மூலம் அறிய முடியவில்லை.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்டேட் செய்யப்பட்டிருக்கலாம். அதேபோல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்படலாம். ஆனால் அவை என்னென்ன என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியவில்லை. அவற்றை அறிய நவ.30 வரையில் காத்திருக்க வேண்டும்.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

சர்வதேச சந்தைகளில் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரை ஸ்கோடா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா என்ற செடான் கார்களில் தான் ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வை அடுத்ததாக வழங்கவுள்ளதாக ஸ்கோடா சமீபத்தில் அறிவித்திருந்தது.

2022 ஸ்கோடா கரோக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!! நவ.30இல் உலகளவில் அறிமுகம்!

உலகளவில் வருகிற 30ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ள இந்த புதிய ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் கார் முதலாவதாக ஐரோப்பாவில் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம். இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் கரோக் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகப்படுத்தப்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2022 karoq global debut soon skoda revealed new design sketches
Story first published: Wednesday, November 17, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X