400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

நெக்ஸான் இவி இந்தியாவில் தற்போதைக்கு பலரால் வாங்கப்படும் பேட்டரி கார்களுள் முதன்மையானதாக விளங்கி வருகிறது. இதன் மூலம் கிடைத்த வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை மேலும் விரிவுப்படுத்த அதிக ரேஞ்சை கொண்ட நெக்ஸான் இவி-ஐ அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி உள்ளது. நெக்ஸானின் தோற்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை பார்த்த டாடா நிறுவனம் தனது முதலாவது எலக்ட்ரிக் காரை நெக்ஸானில் தான் கொண்டுவந்தது.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

நெக்ஸான் இவி இந்தியாவில் தற்போதைக்கு பலரால் வாங்கப்படும் பேட்டரி கார்களுள் முதன்மையானதாக விளங்கி வருகிறது. இதன் மூலம் கிடைத்த வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை மேலும் விரிவுப்படுத்த அதிக ரேஞ்சை கொண்ட நெக்ஸான் இவி-ஐ அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

நெக்ஸான் இவி-யின் அப்டேட் வெர்சன் அடுத்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், புதிய நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் வேரியண்ட்களின் வரிசையில், அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய பெரிய அளவிலான பேட்டரி தொகுப்பை கொண்ட புதிய வேரியண்ட்களும் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

இதன் மூலமாக 2022 நெக்ஸான் இவி-க்கு பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அதாவது எலக்ட்ரிக் காரில் அதிக ரேஞ்சை விரும்பும் வாடிக்கையாளர்களும் நெக்ஸான் இவி-யின் பக்கம் வரலாம். நமக்கு கிடைத்துள்ள தகவல்களில், 2022 நெக்ஸான் இவி-யின் ரேஞ்ச் சுமார் 400கிமீ அளவில் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

தற்போதைக்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த எலக்ட்ரிக் கார்களில் கிட்டத்தட்ட 60% நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தைரியமாக அதன் மற்றொரு எலக்ட்ரிக் காராக, அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்திலான டிகோர் இவி-ஐ அறிமுகப்படுத்தியது. நெக்ஸான் இவி-யில் வழங்கப்படும் அதே ஜிப்ட்ரான் தொழிற்நுட்பம் டிகோர் இவி-யிலும் வழங்கப்பட்டுள்ளது.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

நெக்ஸான் இவி-யின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் அதன் விலை. நெக்ஸான் எலக்ட்ரிக் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.24 லட்சத்தில் இருந்து ரூ.16.85 லட்சம் வரையில் உள்ளன. இது நெக்ஸான் இவி-யின் போட்டி மாடல்களான எம்ஜி இசட்.எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

நெக்ஸான் இவி-யில் தற்சமயம் 30.2 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இதனை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 312 கிமீ தூரத்திற்கு பயணிக்கலாம். எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைந்து இந்த பேட்டரி தொகுப்பு அதிகப்பட்சமாக 127 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்குகிறது.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

312கிமீ ரேஞ்ச் என்பது அனைத்து காரணிகளும் சரியாக அமைந்து கிடைக்கும் அதிகப்பட்ச ரேஞ்ச் ஆகும். நிஜ உலகில் இத்தகைய ரேஞ்ச் கிடைக்காது என்று கூட சொல்லலாம். ஆனால் நிச்சயமாக 250கிமீ அளவில் நிஜ உலக ரேஞ்சை நெக்ஸான் இவி-யில் அதன் வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். இதேபோல்தான், 400கிமீ ரேஞ்ச் என்பது அதிகப்பட்ச அளவே. அப்படியென்றால், நிஜ உலகில் 300-320கிமீ என்ற அளவிலேயே கிடைக்கும்.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

இருப்பினும் இதுவே அதன் போட்டி மாடல்களை சமாளிக்க நெக்ஸான் இவி-க்கு போதுமானதாக இருக்கும். ஒரு காரின் மைலேஜ் குறைவது போலதான், ஒரு எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் குறைவதற்கு சாலையின் தரம், ஓட்டுனரின் டிரைவிங் ஸ்டைல் மற்றும் காலநிலை உள்ளிட்டவை காரணிகளாக அமைகின்றன. 400கிமீ ரேஞ்ச் உடன் வரலாம் என எதிர்பார்க்கப்படும் அப்டேட் செய்யப்பட்ட புதிய டாடா நெக்ஸான் இவி-யில் 40kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

இத்தகைய பெரிய அளவிலான பேட்டரி மாற்றத்தால், காரின் எடையும் 100 கிலோ அளவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல் பேட்டரியை பொருத்த காருக்கு அடியிலும் சில மாற்றங்களை டாடா நிறுவனம் கொண்டுவரலாம். மேலும் இந்த எலக்ட்ரிக் காரில் சில தேர்ந்தெடுக்கக்கூடிய மீளூருவாக்க மோட்களையும் டாடா புதியதாக சேர்க்க முயற்சிக்கலாம்.

400கிமீ ரேஞ்ச் உடன் 2022 டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரா? உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்!!

அதேநேரம் தற்போதைய மாடலில் இருந்து சற்று வேறுப்படுத்திக்காட்ட 2022 நெக்ஸான் இவி-யின் தோற்றத்திலும் கட்டாயமாக மாற்றங்கள் கொண்டுவரப்படும். இந்த வகையில் புதிய அலாய் சக்கரங்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி பிரோகிராம் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம். இதன் காரணமாக காரின் விலையும் ரூ.3- 4 லட்சங்கள் அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
2022 tata nexon ev will reportedly to have range of more than 400km
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X