ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைகளை ஹூண்டாய் நிறுவனம் சரியாக புரிந்து கொண்டு, அதற்கேற்ற கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதுதான் இதற்கு காரணம். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலும் கூட ஹூண்டாய் கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

ஹூண்டாய் கார்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை. அத்துடன் ஹூண்டாய் நிறுவனம் இந்தியா முழுவதும் பரந்து விரிந்த சர்வீஸ் சென்டர் வசதியையும் வைத்துள்ளது. இதன் காரணமாகதான் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலும் ஹூண்டாய் கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்த செய்தியில் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்க கூடிய ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

ஹூண்டாய் ஐ10 (2012-2018)

ஹூண்டாய் ஐ10 தலைசிறந்த கார்களில் ஒன்று. சிறப்பான செயல்திறன், போதுமான வசதிகள் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய காரணங்களால்தான் ஹூண்டாய் ஐ10 வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்கிறது. செகண்ட் ஹேண்ட்டில் வாங்குவதற்கு ஏற்ற காராக ஹூண்டாய் ஐ10 திகழ்வதற்கும் இவைகள்தான் காரணம்.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

ஹூண்டாய் ஐ10 காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவற்றின் 'ரீஃபைன்மெண்ட்' சிறப்பானது. 2.50 லட்ச ரூபாய் 3.50 லட்ச ரூபாய் வரையிலான விலையில் யூஸ்டு ஐ10 காரை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால் காரின் கண்டிஷன் மற்றும் தயாரிப்பு வருடம் ஆகியவற்றை பொறுத்து விலை மாறுபடலாம். அதனை மனதில் கொண்டு முடிவு செய்யுங்கள்.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

ஹூண்டாய் ஐ20 (2012-2020)

இந்தியாவின் தலைசிறந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் ஐ20 திகழ்கிறது. இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் இந்த கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்கிறது. குறிப்பாக ஹூண்டாய் ஐ20 காரின் வசதிகள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்கின்றன.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

யூஸ்டு ஐ20 காரை 3 லட்ச ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரையிலான விலையில் வாங்கலாம். இந்திய சந்தையில் தற்போது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் விற்பனையில் இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய தலைமுறை மாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

ஹூண்டாய் எலாண்ட்ரா (2014-2019)

இது பிரீமியம் செடான் ரகத்தை சேர்ந்த கார். இது ஹோண்டா சிவிக், டொயோட்டா கரோல்லா மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா ஆகிய கார்களுக்கு போட்டியாளர் ஆகும். சௌகரியமான பயணம் மற்றும் ஓட்டுவதற்கு எளிமையானது ஆகிய பண்புகளால் ஹூண்டாய் எலாண்ட்ரா வாடிக்கையாளர்கள் மத்தியில் தலைசிறந்து விளங்குகிறது.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

இந்த காரின் 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மிகவும் பிரபலம். இந்த காரின் புதிய வேரியண்ட்கள் பல அதிநவீன வசதிகளை பெற்றுள்ளன. யூஸ்டு எலாண்ட்ரா காரை 6 லட்ச ரூபாய் முதல் 13 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் வாங்கலாம். ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இது காரின் வயது மற்றும் கண்டிஷன் ஆகியவற்றை பொறுத்தது.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

ஹூண்டாய் வெர்னா (2014-2020)

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா திகழ்கிறது. குறிப்பாக இந்த காரின் டீசல் இன்ஜின் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஹூண்டாய் வெர்னா காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ரீஃபைன்மெண்ட் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய அம்சங்களில் தலைசிறந்து விளங்குகிறது.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

ஹூண்டாய் எலாண்ட்ரா காரை எவ்விதமான பிரச்னைகளும் இல்லாமல் 1 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பலர் ஓட்டியுள்ளனர். இதன் டிசைன் மற்றும் வசதிகளும் வாடிக்கையாளர்களாக கவரும் விஷயங்களாக உள்ளன. வயது மற்றும் கண்டிஷனை பொறுத்து, 4 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான விலையில் ஹூண்டாய் வெர்னா காரை வாங்கலாம்.

ஒவ்வொன்னும் சூப்பர் மாடல்... செகண்ட் ஹேண்டில் வாங்குவதற்கு ஏற்ற கார்கள்... என்ன விலையில் வாங்கலாம் தெரியுமா?

புதிய மாடல்கள்

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20, கிரெட்டா மற்றும் வெனியூ ஆகிய கார்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. கோனா என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
4 best used hyundai cars i10 i20 elantra verna
Story first published: Friday, November 5, 2021, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X