பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள நிலையில், மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் கார் உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தினசரி கார் பயன்படுத்துவோருக்கும், தொலைதூர பயணங்களை அடிக்கடி மேற்கொள்வோருக்கும் எரிபொருள் விலை உயர்வு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

எனவே சிஎன்ஜி கார்களுக்கு மாறுவது குறித்து இந்தியாவில் தற்போது பலரும் சிந்தித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி கார்களை இயக்குவதற்கு குறைந்த செலவே ஆகும். அத்துடன் பெட்ரோல், டீசல் கார்கள் அளவிற்கு சிஎன்ஜி கார்கள் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாது. இதன் காரணமாக இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

இந்திய சந்தையில் கிடைக்கும் அதிக மைலேஜ் வழங்க கூடிய சிஎன்ஜி கார்கள் குறித்த தகவல்களை தற்போது பலரும் இணையத்தில் தேட தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவை வழங்கியுள்ளோம். இந்த செய்தியில் அதிக மைலேஜ் வழங்க கூடிய Maruti Suzuki நிறுவனத்தின் சிஎன்ஜி கார்கள் பற்றிய விபரங்களை பட்டியலிட்டுள்ளோம்.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki WagonR (ஒரு கிலோவிற்கு 32.52 கிமீ)

இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான டால்பாய் ஹேட்ச்பேக் கார் Maruti Suzuki WagonR. எனவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் சிஎன்ஜி கார்களில் ஒன்றாக Maruti Suzuki WagonR உள்ளது. Maruti Suzuki நிறுவனத்தின் S-CNG தொழில்நுட்பம், தினசரி கார் பயன்படுத்துவர்கள் மத்தியில் WagonR காரை மிகவும் விருப்பமான தேர்வாக மாற்றியுள்ளது.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki WagonR சிஎன்ஜி காரின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 32.52 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிக சிறப்பான மைலேஜ் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த சிறப்பான மைலேஜ் காரணமாகதான் தினசரி கார் பயன்படுத்துபவர்கள் Maruti Suzuki WagonR சிஎன்ஜி காரை அதிகம் விரும்புகின்றனர்.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki Alto 800 (ஒரு கிலோவிற்கு 31.59 கிலோ மீட்டர்)

Maruti Suzuki WagonR காரை தொடர்ந்து இந்த பட்டியலில் இரண்டாவதாக வருவது Maruti Suzuki Alto 800. இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மற்றொரு கார். அத்துடன் சிறிய குடும்பங்களுக்கு மிகவும் ஏற்ற காராக Maruti Suzuki Alto 800 திகழ்கிறது. Maruti Suzuki Alto 800 காரிலும், S-CNG தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki Alto 800 காரில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே சிஎன்ஜி எரிபொருள் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த கார் ஒரு கிலோவிற்கு 31.59 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நீங்கள் எதிர்பார்க்கலாம். Maruti Suzuki Alto 800 காரின் மைலேஜூம் மிகவும் சிறப்பானது என்பதில் சந்தேகமில்லை.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki S-Presso (ஒரு கிலோவிற்கு 31.2 கிலோ மீட்டர்)

இந்த பட்டியலில் மூன்றாவதாக வருவது Maruti Suzuki S-Presso. Maruti Suzuki S-Presso காரின் சிஎன்ஜி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன்பின் விற்பனைக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த காரின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இருந்தாலும் இந்தியர்கள் தொடர்ந்து இந்த காரை வாங்கி கொண்டுதான் உள்ளனர்.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki S-Presso காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 31.2 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான மைலேஜ், Maruti Suzuki S-Presso காரை இந்தியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என கூறலாம். ஒவ்வொரு மாதமும் இந்த கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki Celerio (ஒரு கிலோவிற்கு 31 கிலோ மீட்டர்)

Maruti Suzuki Celerio காரும் S-CNG தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது எரிபொருள் செலவை குறைத்து கொள்ள இது உதவி செய்கிறது. எனவே எங்களது அதிக மைலேஜ் வழங்க கூடிய Maruti Suzuki நிறுவனத்தின் சிஎன்ஜி கார்களின் பட்டியலில், Maruti Suzuki Celerio காரும் இடம்பிடித்துள்ளது.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki Celerio கார் ஒரு கிலோவிற்கு 31 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது. Maruti Suzuki நிறுவனம் தற்போது Celerio காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை Maruti Suzuki Celerio வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசலை மறந்திடுங்க! மைலேஜை வாரி வழங்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்! ஒரு கிலோவிற்கே இவ்ளோ கிமீ போகுமா?

Maruti Suzuki Ertiga (ஒரு கிலோவிற்கு 26 கிலோ மீட்டர்)

S-CNG தொழில்நுட்பத்துடன் சந்தையில் கிடைக்கும் ஒரே எம்பிவி ரக கார் என்ற பெருமை Maruti Suzuki Ertiga காருக்கு உள்ளது. அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், எரிபொருள் செலவை குறைக்க விரும்பினால், இது மிக சிறந்த தேர்வாக இருக்கும். இந்த கார் ஒரு கிலோவிற்கு 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
5 best mileage maruti suzuki cng cars
Story first published: Tuesday, August 24, 2021, 9:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X