பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

நீங்கள் நீண்ட காலமாக வைத்திருக்கும் காருடன் உங்களுக்கு பல்வேறு நினைவுகள் இருக்கும். எனவே அந்த காரை விட்டு பிரிவது என்பது மனதிற்கு கவலையை அளிக்கும் விஷயமாக இருக்கும். ஆனால் ஒரு சில அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் அந்த காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாறி விடுவது சிறந்ததாக இருக்கும். அந்த அறிகுறிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

அடிக்கடி பழுது

சில சமயங்களில் பழைய கார்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக பிரச்னைகள் ஏற்படும். சஸ்பென்ஸன் பழுது அல்லது டிரான்ஸ்மிஷன் பிரச்னை போன்றவற்றை சரி செய்வதற்கு அதிக செலவு ஆகும். இதுபோன்ற பிரச்னைகளை உடனடியாக கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இதில், கொடுமை என்னவென்றால், சில சமயங்களில் காரின் மதிப்பை விட, ரிப்பேர் செய்வதற்கு அதிக செலவு ஆகும்.

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால், நீங்கள் புதிய காருக்கு மாறி விடுவது நல்லது. இல்லாவிட்டால் பழைய காருக்கு நீங்கள் தொடர்ச்சியாக அதிக செலவு செய்து கொண்டே வேண்டியதாக இருக்கும். இப்படி செலவு செய்வதை விட புதிய காருக்கு மாறி விடுவதுதான் சிறந்தது. இதன் மூலம் தேவையற்ற மன உளைச்சலையும் தவிர்க்கலாம்.

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

நம்பகத்தன்மை இழப்பு

கார் ஒரு இயந்திரம் என்பதை சில சமயங்களில் நாம் மறந்து விடுகிறோம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதனால் தொடர்ந்து இயங்க முடியாது. இதுபோன்ற சமயங்களில் கார் நம்பகத்தன்மையை இழந்து விடும். அதாவது எப்போது வேண்டுமானாலும் பழுது ஆகலாம். அப்படிப்பட்ட ஒரு காரை நம்பி நீங்கள் வெளியில் செல்ல முடியாது. இதுபோன்ற சூழல்களில் புதிய காருக்கு மாறி விடுவது நல்லது.

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

பாதுகாப்பு

காரின் பாதுகாப்பில் நாம் எப்போதும் சமரசம் செய்து கொள்ளவே கூடாது. உங்கள் கார் உங்களுக்கும், உடன் பயணிக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இல்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதனை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம். உங்கள் கார் பாதுகாப்பில் சரியாக இல்லை என்றால், புதிய காருக்கு மாறி விடுவது நல்லது.

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

எரிபொருள்

உங்கள் கார் வழக்கத்திற்கு மாறாக அதிக எரிபொருளை குடித்தால், புதிய காருக்கு மாறுவது நல்லது. நீங்கள் வழக்கத்திற்கு மாறாக உங்கள் காருக்கு அதிக எரிபொருளை நிரப்புகிறீர்கள் என்றால், அது நீங்கள் புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை தெளிவாக காட்டும் அறிகுறியாகும். காரின் மைலேஜ் குறைந்து கொண்டே வந்தால், அதனை சமாளிப்பது சிரமமானது.

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

ஏனெனில் பெட்ரோல்/டீசலின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் எரிபொருள் சிக்கனத்திற்கு நாம் மிகவும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். மைலேஜ் பிரச்னையை சரிசெய்ய முடியாவிட்டால், புதிய காருக்கு மாறி விடுவதுதான் சிறந்ததாக இருக்கும். இல்லாவிட்டால் நீங்கள் எரிபொருளுக்கு அதிக தொகையை செலவிட வேண்டியதாக இருக்கும்.

பழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா?

இன்டீரியர்

நீங்கள் புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை காட்டும் முக்கியமான அறிகுறிகளில் இன்டீரியரும் ஒன்று. ஒரு காரின் முக்கியமான அம்சங்களில் இன்டீரியர் மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் காரின் இன்டீரியர் பாழடைந்த நிலைக்கு சென்றால், நீங்கள் புதிய காருக்கு மாறுவது நல்லது. இன்டீரியருக்கு வயதாகி விட்டது என்பதை நீங்கள் உணர்வது மிகவும் முக்கியமானது.

Most Read Articles

English summary
5 Signs That Indicate You Need a New Car. Read in Tamil
Story first published: Saturday, May 29, 2021, 19:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X