5 வயது சிறுவன் செய்த காரியத்தால் ஆச்சரியத்தில் உறைந்த பிரபல தொழில் அதிபர்... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

5 வயது சிறுவன் செய்த காரியத்தால், ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியமடைந்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

5 வயது சிறுவன் செய்த காரியத்தால் ஆச்சரியத்தில் உறைந்த பிரபல தொழில் அதிபர்... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதன் புதிய தலைமுறை மாடல், இந்திய சந்தையில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த உடனேயே இந்திய வாடிக்கையாளர்களை புதிய தலைமுறை மஹிந்திரா தார் சுண்டி இழுத்து விட்டது.

5 வயது சிறுவன் செய்த காரியத்தால் ஆச்சரியத்தில் உறைந்த பிரபல தொழில் அதிபர்... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

எனவே வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்தனர். இப்படிப்பட்ட ஒரு எஸ்யூவியை ஓவியர் ஒருவர் வரைந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் ஓவியர்கள் பலர் புகழ்பெற்ற கார்களை வரைந்த வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் தற்போது புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வரைந்த ஓவியருக்கு வெறும் 5 வயது மட்டுமே ஆகிறது.

5 வயது சிறுவன் செய்த காரியத்தால் ஆச்சரியத்தில் உறைந்த பிரபல தொழில் அதிபர்... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

5 வயது சிறுவன் வரைந்த தார் எஸ்யூவியின் ஓவியம், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்துள்ளது. இதற்காக அந்த சிறுவனுக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். நாகேஷ் என்ற சிறுவன்தான் புதிய தார் எஸ்யூவியின் ஓவியத்தை வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

5 வயது சிறுவன் செய்த காரியத்தால் ஆச்சரியத்தில் உறைந்த பிரபல தொழில் அதிபர்... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

ஆனால் நாகேஷ் இப்படி ஓவியம் வரைந்து, அனைவரின் மனங்களையும் வெல்வது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, டாடா ஹாரியர், டாடா சஃபாரி, டாடா அல்ட்ராஸ், லேண்ட் ரோவர் டிஃபெண்டர், லேண்ட் ரோவர் வெலார் போன்ற புகழ்பெற்ற கார்களின் ஓவியங்களை நாகேஷ் வரைந்துள்ளார்.

5 வயது சிறுவன் செய்த காரியத்தால் ஆச்சரியத்தில் உறைந்த பிரபல தொழில் அதிபர்... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

தற்போது நாகேஷ் வரைந்துள்ள புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்ப மஹிந்திரா நிறுவனத்தால், புதிய தலைமுறை தார் எஸ்யூவிகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. தார் எஸ்யூவியின் உற்பத்தியில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது.

5 வயது சிறுவன் செய்த காரியத்தால் ஆச்சரியத்தில் உறைந்த பிரபல தொழில் அதிபர்... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

இதில், செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மிகவும் முக்கியமானது. நவீன கார்களின் மூளை என குறிப்பிடப்படும் செமி கண்டக்டர் சிப்களுக்கு உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கால், செல்போன் மற்றும் லேப்டாப்களுக்கான தேவை உயர்ந்ததுதான், செமி கண்டக்டர் சிப்களுக்கான தேவை உயர்ந்ததற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

5 வயது சிறுவன் செய்த காரியத்தால் ஆச்சரியத்தில் உறைந்த பிரபல தொழில் அதிபர்... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

செமி கண்டக்டர் சிப்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால், ஆட்டோமொபைல் துறைக்கு போதிய அளவில் அவை கிடைப்பதில்லை. இதன் காரணமாக உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தார் எஸ்யூவியின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொய்விற்கு இந்த பிரச்னை முக்கியமான காரணமாகும்.

இதன் காரணமாக புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவுகிறது. எனவே தார் எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனுடன் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பிரச்னையும் தற்போது சேர்ந்து கொண்டுள்ளது. எனினும் நிலைமை விரைவில் சீரடையும் என நம்பலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
5 Year Old Boy Draws The New Mahindra Thar SUV. Read in Tamil
Story first published: Thursday, May 27, 2021, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X