டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

வெறுப்பாளர்களே இல்லாத பிரபலமான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வாரத்திற்கு ஒரு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் இதில் நிறைய கார்கள் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விடுகின்றன. ஒரு சில கார்கள்தான் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கின்றன. கிரிக்கெட்டில் ஒரு நாடுகளையும், ஒரு சில வீரர்களையும் வெறுப்பவர்களே இருக்க மாட்டார்கள். அதாவது ஜீரோ ஹேட்டர்ஸ் (Zero Haters).

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

வெறுப்பாளர்களை சம்பாதிக்காமல் இருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான். அதேபோல் இந்திய சந்தையில் ஒரு சில கார்களுக்கும் ஹேட்டர்களே கிடையாது. அந்த கார்களில் முக்கியமானவை குறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

டாடா நெக்ஸான்

பாதுகாப்பு விஷயத்தில் டாடா நெக்ஸான் ஒரு டிரெண்ட்செட்டர் (Trendsetter). குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் இந்திய கார் டாடா நெக்ஸான்தான். இதற்கு பிறகுதான் புதிய கார் வாங்கும்போது பாதுகாப்பிற்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர்.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

முன்பெல்லாம் இந்திய வாடிக்கையாளர்கள் மைலேஜிற்குதான் அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். ஆனால் தற்போது பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இதன் காரணமாகதான் சமீப காலமாக நெக்ஸான் உள்ளிட்ட டாடா நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. மாருதி சுஸுகியின் அளவிற்கு டாடா இன்னும் வளரவில்லை என்றாலும் கூட, டாடா வளர்ந்து வரும் வேகம் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

டாடா டியாகோ

கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு இது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக டாடா டியாகோ திகழ்கிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 4 ஸ்டார் ரேட்டிங்கை டாடா டியாகோ பெற்றிருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். இதுதவிர டாடா டியாகோ காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

டொயோட்டா இன்னோவா

இந்திய சந்தையின் 'எவர்க்ரீன்' கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா காரை குறிப்பிடலாம். டொயோட்டா இன்னோவா காருக்கு வெறுப்பாளர்களே இல்லை என்பதை நிச்சயம் அடித்து கூற முடியும். புதிய கார் சந்தையில் மட்டுமல்லாது யூஸ்டு கார் சந்தையிலும் டொயோட்டா இன்னோவா காருக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

டொயோட்டா இன்னோவா மீதான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையையே இது காட்டுகிறது. புதிய கார் சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனையை பார்த்தால், இந்த காருக்கு இங்கு எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது நமக்கு தெளிவாக புரியும். இந்த செக்மெண்ட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சரி நிகரான போட்டியாளர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்த பட்டியலில் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டிய மற்றொரு டொயோட்டா தயாரிப்பு ஃபார்ச்சூனர். இந்த காருக்கு என தனியே மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டமே இருந்து வருகிறது. அவர்கள் டொயோட்டா ஃபார்ச்சூனர் தவிர வேறு எந்த காருக்கும் செல்ல மாட்டார்கள். விலை உயர்ந்த கார் என்ற போதிலும் கூட, இதன் விற்பனை எண்ணிக்கை பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய மாடல் மட்டுமல்லாது, பழைய மாடல்களுக்கும் ஹேட்டர்கள் கிடையாது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் எந்த தலைமுறை மாடலையும் யாரும் வெறுப்பதில்லை. உங்கள் ஒவ்வொரு தேவையையும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பூர்த்தி செய்கிறது. மைலேஜ், சௌகரியம், வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஸ்விஃப்ட்டிற்கு நிகர் ஸ்விஃப்ட்தான்.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

கியா செல்டோஸ்

இந்திய சந்தையில் மிக வேகமாக பிரம்மாண்ட வெற்றியை சந்தித்த கார்களில் ஒன்று கியா செல்டோஸ். இந்த காருக்கும் நிச்சயமாக வெறுப்பாளர்கள் இல்லை. ஆனால் தற்போதைய நாட்களில் கியா செல்டோஸ் காரின் கட்டுமான தரம் குறித்து ஒரு சில எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து கொண்டுள்ளன என்பது நிச்சயமாக உண்மைதான்.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

அதற்காக இந்த எஸ்யூவி காரை யாரும் வெறுக்கிறார்கள் என கூறி விட முடியாது. இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் இந்திய சந்தையில் கியா செல்டோஸ் எஸ்யூவி மிகவும் சிறப்பான வகையில் விற்பனையாகி கொண்டுள்ளது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் செல்டோஸ்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவாவை எல்லாம் யாராலும் வெறுக்கவே முடியாது... ஹேட்டர்களே இல்லாத பிரபலமான கார்கள்!

இங்கே நாங்கள் ஒரு சில கார்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். நிச்சயமாக இந்த பட்டியலில் நிறைய கார்கள் விடுபட்டுள்ளன. அந்த கார்களை மற்றொரு செய்தியில் குறிப்பிடுகிறோம். உங்கள் கருத்துப்படி இந்த காருக்கு வெறுப்பாளர்களே கிடையாது என நீங்கள் நினைத்தால், அந்த காரை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
6 popular cars in india with zero haters maruti suzuki swift toyota innova tata nexon
Story first published: Tuesday, December 21, 2021, 16:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X