புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷன் மீண்டும் கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

இரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி, இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. அதே சமயம் அதன் நேரடி போட்டியாளரான கியா செல்டோஸின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி என்ற பெருமையை ஹூண்டாய் கிரெட்டா பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 97,000 கிரெட்டா எஸ்யூவிக்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டாவின் சிறப்பான விற்பனை நடப்பாண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

இந்த சூழலில் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் தயாராகி வருகிறது. அனேகமாக நடப்பாண்டு இறுதிக்குள் ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்காசர் (Alcazar) என்ற பெயரில் இந்த புதிய மாடல் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

தென் கொரியா மற்றும் இந்திய சாலைகளில் ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் மாடல் சோதனை செய்யப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதன் மூலம் அதன் டிசைன் பற்றி நமக்கு ஒரு சில தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த சூழலில் இந்தியாவில் சாலை சோதனைக்கு உட்படுத்தப்படும்போது 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா சமீபத்தில் மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்து மோட்டார்பீம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

ஸ்பிளிட் ஹெட்லேம்ப்களுடன் நமக்கு பரிட்சயமான முன் பகுதி இருப்பதை இந்த சமீபத்திய ஸ்பை படங்கள் எடுத்து காட்டுகின்றன. அதே சமயம் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டாவின் க்ரில் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின் பகுதியில் கூடுதலாக ஒரு வரிசை சேர்க்கப்படுவதால், 5 சீட்டர் கிரெட்டாவை காட்டிலும் இது நீளமானதாக இருக்கும்.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

6 (2x2x2) மற்றும் 7 சீட்டர் (2x3x2) மாடல்களில் அல்காசர் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா சஃபாரி, புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உள்ளிட்ட கார்களுடன், ஹூண்டாய் அல்காசர் போட்டியிடும்.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

16 லட்ச ரூபாய் முதல் 22 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ஹூண்டாய் அல்காசர் விற்பனை செய்யப்படலாம் (எக்ஸ் ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது. 5 சீட்டர் கிரெட்டாவில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் அதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் அல்காசர் காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

இன்டீரியரிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாது என கூறப்படுகிறது. எனினும் மூன்று வரிசை வெர்ஷனின் பிரீமியம் உணர்வை மேம்படுத்துவதற்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம். மற்றபடி இன்டீரியரில் வழங்கப்படும் வசதிகள் பெரும்பாலும் தற்போது உள்ள 5 சீட்டர் கிரெட்டாவில் இருந்துதான் பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...

இதன்படி ப்ளூலிங்க், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
7-Seater Hyundai Creta Spied Testing Again In India - Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, January 13, 2021, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X