எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்?, எஞ்ஜினை மாற்ற வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

வாகனங்களில் எஞ்ஜின் எந்தளவு முக்கியமான ஓர் பாகமாக செயல்படுகின்றதோ, அது நல்ல முறையில் இயங்க எஞ்ஜின் ஆயில் ஓர் மிக முக்கியமான அங்கமாக உள்ளது. இதை சரிவர கவனிக்காவிடில் விரைவிலே எஞ்ஜினில் கோளாறு போன்ற பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

எனவேதான் வாகன ஓட்டிகளை அவர்களின் வாகனங்களின் எஞ்ஜின் ஆயிலை குறிப்பிட்ட கி.மீட்டர்கள் இடைவெளியில் காலதாமதமின்றி மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்றுவது?

எஞ்ஜின் ஆயில் மாற்றப்பட வேண்டும் என்பதற்கான சமிக்ஞைகளை வாகனங்களே நமக்கு வழங்குகின்றன. ஆனால், அதனை பெரும்பாலானோர் கண்டுக் கொள்வதே இல்லை. ஒரு சிலருக்கு சமிக்ஞைகள் என்ன என்பதே தெரிவதில்லை. இந்த மாதிரியோனருக்கு உதவும் வகையிலேயே ஏழு வகையான சமிக்ஞைகள் குறித்த தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அனைத்தும் எஞ்ஜின் பழையதாகிவிட்டன, அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்பதற்கான எச்சரிக்கைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றை மிக சாதரணமாக கடந்து செல்வோமேனால் மிக விரைவில் பழுது அல்லது பிரேக்டவுண் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

ஆயிலை பரிசோதிக்கவும்:

உங்கள் வாகனத்தில் இருக்கும் எஞ்ஜின் ஆயில் பழையதாக ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தால் அதனை மெக்கானிடமோ அல்லது நீங்களாகவோ செக் செய்து கொள்ளலாம். ஆம், எஞ்ஜின் ஆயில் லேசாக வெளியில் எடுத்து விரல் நுனியில் வைத்து பதம் பார்க்கலாம், அல்லது, ஓர் வெள்ள காகிதத்தில் வைத்து அதன் தன்மையை ஆராயலாம்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

ஆயில் பழையதாக இருந்தால் அது மிக அழுக்காகவும், கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும். அப்படி இருக்குமானால் உடனடியாக ஆயிலை மாற்றிவிட வேண்டும். இப்படி இருக்கும் ஆயிலின் வாசனை மாறுபட்டு காணப்படும் என்பதும் ஓர் அறிகுறியாகும். வாசனையானது கருகியதைப் போன்று இருக்கும் அல்லது இதைவிட மோசமான வாசனையை பழைய எஞ்ஜின் ஆயில் வெளியேற்றும்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

இதை வைத்தே மெக்கானிக்கும் ஆயிலின் தரத்தை யூகிப்பர். வெகு நாட்களாக ஆயில் மாற்றப்படாமல் இருந்து உராய்வின் காரணமாக ஏற்படும் எஞ்ஜினின் கழிவுகள் அதிகம் சேர்ந்து, வாகனத்தின் இயக்கத்தையே சீர்குலைத்துவிடும். இத்துடன், அதிக வெப்பத்தையும் அது வெளியேற்றும்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

எஞ்ஜினில் இருந்து அதிக சத்தம் வரும்:

எஞ்ஜின் புதிதானதாக இருந்தால் சற்று லேசான ஒளி வரும். அதேசமயம், ஆயில் பழையதாக இருந்தால் சத்தமும் சற்று கூடுதலாக வரும். ஆகையால், வழக்கத்திற்கு மாறான சத்தம் எஞ்ஜினில் இருந்து வருமானால் அதை உடனடியாக கவனிப்பது அவசியம். இது எஞ்ஜின் ஆயில் பழையதாகி விட்டது என்பதற்கான ஓர் சமிக்ஞை ஆகும்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

ஐடிலிங்கில் இருக்கும்போது அதிக குலுங்கள் ஏற்படும்:

எஞ்ஜின் ஆயில் சற்று பழையதாக இருக்குமானால் ஐடிங்கிள் இருக்கும்போது கார் சற்று அதிகமான குலுங்களை ஏற்படுத்தும். இது ஓர் வாகனத்தில் ஏற்படுமானால் எஞ்ஜின் ஆயில் மிக மோசமான நிலையில் இருக்கின்றது என்பதே அர்த்தமாகும். இதனை தவிர்க்க உடனடியாக ஆயிலை மாற்றுதல் அவசியம்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அதிக புகை:

வழக்கமான புகையைக் காட்டிலும் அதிக புகை மற்றும் மாறுபட்ட நிறத்தில் புகை வெளியேறுகின்றது என்றால் இதற்கும் ஆயில் பழையதாகி விட்டது என்பதே பொருள். இதனை நீண்ட நாட்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மிகப் பெரிய சிக்கலையும், செலவையும் ஏற்படுத்திவிடும்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

குறிப்பாக, உங்கள் வாகனத்தில் இருந்து அதிக அடர் வெள்ளை நிற புகை வெளியேறுமானால் எண்ணெய் கசிவு அல்லது ஹெட் கேஸ்கட்டில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். இதனை சரி செய்ய மிகப் பெரிய செலவாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

வாகனத்தின் உள்ளே எண்ணெய் வாசனை:

இது மட்டும் ஒரு போதும் நடக்கக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு நடக்குமானால், எஞ்ஜின் அதிகம் வெப்பமாகிறது அல்லது எண்ணெய் கசிவு அதிகளவில் ஏற்படுகின்றது என அர்த்தம் ஆகும். இது மிகக் கடுமையான சிக்கல்களுக்கு வழி வகுக்கக் கூடியவை. ஆகையால், உடனடியாக ஆயிலை செக் செய்வது நல்லது.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அதிகமாக எரிபொருளை உரிஞ்சும்:

தரமற்ற ஆயில், பழைய ஆயில் ஆகியவை அதிக எஞ்ஜின் உராய்வை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவு எஞ்ஜின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படும். அவ்வாறு செயல்பாடு பாதிக்குமானால் மைலேஜில் கடும் பாதிப்பு ஏற்படுகின்றது என்றே அர்த்தம். ஆகையால், திடீரென உங்கள் வாகனம் மைலேஜை குறைத்து அதிக எரிபொருளை குடிக்கின்றது என்றால் உடனடியாக எஞ்ஜின் ஆயிலையும் சரிபார்த்துவிடுங்கள்.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

கார் வழங்கும் சமிக்ஞை

காரின் டேஷ்போர்டில் குறிப்பிட்ட சில எச்சரிக்கைகளை வழங்குவதற்கென தனி மின் விளக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் எஞ்ஜின் ஆயில்குறித்த தகவலை வழங்குவதற்கென சிறிய மின் விளக்கு டேஷ்போர்டில் கொடுக்கப்பட்டிருக்கும். அது எச்சரிக்கை வழங்குமானால் அதனையும் தவிர்க்காமல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே வாகனத்துறை வல்லுநர்களின் முக்கிய அறிவுரையாக இருக்கின்றது.

எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்? இந்த டிப்ஸை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

பொதுவாக, உங்கள் கார் புதியது என்றால் 6 ஆயிரம் மைல்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எஞ்ஜின் ஆயிலை மாற்றுவது. அதுவே உங்கள் கார் சற்று பழையது என்றால் 3 ஆயிரம் மைல்கள் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை எஞ்ஜின் ஆயிலை மாற்றுவது மிக சிறந்தது. இவ்வாறு செய்வதன் வாயிலாக உங்கள் எஞ்ஜினின் ஆயுட்காலத்தை கூட்டிக் கொள்ள முடியும்.

Most Read Articles

English summary
7 Signs For You Need An Oil Change. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X