அட இவரும் வாங்கிட்டாரா? உச்சபட்ச விலை கொண்ட சொகுசு காரை போட்டி போட்டு வாங்கும் பாலிவுட் நடிகர்கள்!
ரன்வீர் சிங்கை தொடர்ந்து மற்றுமொரு பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த ஓர் நடிகர் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 காரை வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக மேபேக் ஜிஎல்எஸ்600 சொகுசு கார் இருக்கின்றது. இந்த காரை 2021 ஜூன் 8ம் தேதி அன்றே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு காருக்கு இந்திய லக்சுரி வாகன பிரியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் தகவலை சமீபத்தில் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதாவது, மேபேக் ஜிஎல்எஸ்600 காரின் முதல் லாட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக அது கூறியிருந்தது. இந்த தகவலை காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த மறு நாளே (ஜூன்9) நிறுவனம் வெளியிட்டிருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவ்வாறு முதல் லாட்டை வாங்கியவர்களில் சிலர் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே இக்காரை ரன்வீர் சிங் அவரது வீட்டிற்கு எடுத்து வந்திருந்தநிலையில், தற்போது மற்றுமொரு பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகரும் தனது வீட்டிற்கு பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுஷ்மான் குர்ரானா இவரே ரன்வீர் சிங்கிற்கு அடுத்தபடியாக ஜிஎல்எஸ்600 லக்சூரி எஸ்யூவி காரை வாங்கியவர் ஆவார். இந்தியாவில் இந்த சொகுசு கார் ரூ. 2.43 கோடி என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பென்ஸ் நிறுவனத்தின் இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட காரையே ஆயுஷ்மான் குர்ரானா வாங்கியிருக்கின்றார். இவரிடத்தில் இந்த கார் மட்டுமில்லைங்க, இன்னும் பல விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆடி ஏ6, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு அதிக விலைக் கொண்ட கார்கள் இருக்கின்றன.

மேலும், டொயோட்டா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸ்டர் என்கிற காரணத்தினால் இவரிடத்தில் டொயோட்டா கார்கள் சிலவும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்600 சொகுசு காரை அவர் பயன்பாட்டிற்கு வாங்கியிருக்கின்றார்.

3.2 டன் எடையிலும் 5.2 மீட்டர் நீளத்திலும் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இட வசதிக்கு சற்றும் குறைவில்லா சொகுசு காராக பென்ஸ் ஜிஎல்எஸ்600 காட்சியளிக்கின்றது. இந்த காரில் 4 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 557 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 9 ஸ்பீடு தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவியின் உதவியுடனே இத்தகைய திறனை ஜிஎல்எஸ்600 வெளிப்படுத்துகின்றது. மேலும், இந்த காரில் 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இது தனியாக 22பிஎஸ் பவர் வரை வழங்க உதவும். இந்த கார் நான்கு அல்லது ஐந்து இருக்கை தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். சன்ஷேட் வசதி, வெண்டிலேட் வசதியுடன் கூடிய நப்பா லெதர் போர்வை பொருத்தப்பட்ட இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், ஏர்மேடிக் ஏர் சஸ்பென்ஷன் என பலவிதமான சிறப்பு வசதிகள் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications