நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

இளைய தளபதி நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் சொகுசு கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நம்ம இளைய தளபதி விஜய். ஆண், பெண், சிறியவர், முதியவர் என பெரும் ரசிக பட்டாளம் இவருக்கு உண்டு. விஜய் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழி பேசும் மக்கள் மத்தியிலும் இவருக்கு மவுசு உண்டு.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையால் மக்களைக் கவர்ந்து வருகின்றார் நடிகர் விஜய். இவருடைய சமீபத்திய வெளியீடான மாஸ்டர் திரைப்படம் தற்போது திரையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளி வந்திருக்கும் இப்படம் மிக சமீபத்தில் அமேசான் பிரைமிலும் வெளியாகியது.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

இம்மாதிரியான சூழ்நிலையில் நடிகர் விஜய் இடத்தில் என்ன மாதிரியான சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. என்ற தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். நடிகர் விஜயிடம் ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஆடி, பிஎம்டபிள்யூ என பல்வேறு நிறுவனங்களின் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

இதில் மிக அதிக விலையில், அவர் அதிகம் பயன்படுத்தக் கூடிய சில கார்களை நாம் இப்பதிவில் பார்க்கிவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

ஆடி ஏ8

ஜெர்மானிய பொறியியளாளர்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட காரே ஆடி ஏ8. இந்தத காரை தனது தினசரி பயணங்களுக்காக நடிகர் விஜய் பயன்படுத்தி வருகின்றார். இது சொகுசு செடான் ரக காராகும். மிக நீளமான வீல் பேஸைக் கொண்ட கார் இது. ஆகையால் இடவசதிக்கு சற்றும் குறைச்சலின்றி இக்கார் இருக்கும்.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

இதன் விலை ரூ. 1.7 கோடிகள் ஆகும். இது வெறும் ஆரம்ப நிலை மாடலின் விலை மட்டுமே ஆகும். நடிகர் விஜய் பயன்படுத்தும் ஆடி ஏ8 எந்த வேரியண்டை பயன்படுத்துகின்றார் என்ற துள்ளியமான தகவல் கிடைக்கவில்லை. இக்கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் எக்ஸ்6

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இவ்விரு கார்களுமே எஸ்யூவி ரக கார்களாகும். எக்கசக்க சொகுசு வசதிகளைக் கொண்ட இவ்விரு கார்களையே நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த வாகனங்கள் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் எக்ஸ்6 இரு கார்களுக்கும் இடையே பெரியளவில் வித்தியாசங்கள் இருக்காது.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

தெளிவாக கூற வேண்டுமானால் கணிசமான மாற்றங்களுடன் காட்சியளிக்கக் கூடிய இரட்டையர்களைப் போன்றதே இவ்விரு கார் மாடல்களும். இருப்பினும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்பின்மீதிருக்கும் அதீத பிரியத்தின் காரணமாக இவ்விரு கார் மாடல்களையும் விஜய் பயன்படுத்தி வருகின்றார்.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

இதில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ரூ. 75.49 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், எக்ஸ்6 96.90 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

மினி கூப்பர் எஸ்

ஹேட்ச்பேக் கார் பிரிவில் அதிக லக்சூரி வசதிக் கொண்ட காராக மினி நிறுவனத்தின் கூப்பர் எஸ் இருக்கின்றது. மிகவும் அடக்கமான மற்றும் ஸ்போர்ட்டி லுக் கொண்டிருக்கும் இந்த சொகுசு கார் மாடலையும் நடிகர் விஜய் பயன்படுத்தி வருகின்றார். இந்தியாவில் அமிதாப் பச்சான் மற்றும் மம்மூட்டி ஆகிய நடிகர்களும் இக்காரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் மிக விலையுயர்ந்த காராக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 2.5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. நாங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த விலை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

நம்ம தளபதி கிட்ட இந்த கார்கூட இருக்கா! நடிகர் விஜயிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்!

ஆன்-ரோடில் இதை விட கூடுதல் விலையிலேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 570 பிஎச்பி மற்றும் 780 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Vijay Owned Luxury Car Collection; Here Are Full List. Read In Tamil.
Story first published: Saturday, February 6, 2021, 17:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X