ரொம்ப நாள் காத்திருந்து புதிய காரை வாங்கிய மலையாள நடிகை... அப்படி என்ன காருங்க அது?.. வாங்க பார்க்கலாம்!

மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் நீண்ட நாள் காத்திருந்து ஓர் புதிய காரை வாங்கியிருக்கின்றார். அந்த கார் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

ரொம்ப நாள் காத்திருந்து புதிய காரை வாங்கிய மாலையாள நடிகை... அப்படி என்ன காருங்க அது?.. வாங்க பார்க்கலாம்!

நீண்ட காலமாக இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வந்த தார் எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது இதன் விற்பனையும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இக்காருக்கான காத்திருப்பு காலம் பல மாதங்களாக அதிகரித்திருக்கின்றது. இப்போ இந்த காரை புக் செய்தால், குறைந்தது 6 மாதங்களாவது காரை கையில் பெற ஆகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப நாள் காத்திருந்து புதிய காரை வாங்கிய மாலையாள நடிகை... அப்படி என்ன காருங்க அது?.. வாங்க பார்க்கலாம்!

மாநிலம் மற்றும் தேர்வும் செய்யும் வேரியண்டைப் பொருத்து இதன் காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படுகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மலையாள திரையுலகைச் சேர்ந்த ஓர் பிரபல நடிகை தார் காரை நீண்ட நாள் காத்திருந்து பெற்றிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரொம்ப நாள் காத்திருந்து புதிய காரை வாங்கிய மாலையாள நடிகை... அப்படி என்ன காருங்க அது?.. வாங்க பார்க்கலாம்!

அணு சித்தாரா, இவரே புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காரை வங்கியவர் ஆவார். மலையாள திரைப்படங்கள் பலவற்றில் முன்னணி நடிகையாக இவர் நடித்திருக்கின்றார். இந்த நிலையிலேயே புக் செய்த சில நாட்களுக்கு பின்னர் தார் காரை அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரொம்ப நாள் காத்திருந்து புதிய காரை வாங்கிய மாலையாள நடிகை... அப்படி என்ன காருங்க அது?.. வாங்க பார்க்கலாம்!

அணு சித்தாரா காரை டெலிவரி பெறும் வீடியோவை என்பிடிவி லைவ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது. திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் மஹிந்திரா கார் விற்பனையாளரின் வாயிலாகவே இக்காரை நடிகை அணு சித்தாரா பெற்றிருக்கின்றார். காரை டெலிவரி எடுக்கும்போது அவரது கணவருடன் சென்றே பெற்றிருக்கின்றனர். அங்கு இருவரும் கேக் வெட்டி பரிமாறிக் கொண்டனர். இதன் பின்னரே புதிய தார் காரை தங்களின் வீட்டிற்கு ஓட்டிச் சென்றனர்.

ரொம்ப நாள் காத்திருந்து புதிய காரை வாங்கிய மாலையாள நடிகை... அப்படி என்ன காருங்க அது?.. வாங்க பார்க்கலாம்!

நடிகை அணு சித்தாரா தற்போது வயநாடு பகுதியிலேயே வசித்து வருகின்றார். கேரளத்தின் மிக முக்கியமான சுற்றுலாப் பகுதிகளில் இதுவும் ஒன்று. மலைப் பாங்கான இடத்தைக் கொண்டது. இந்த இடத்திற்கு ஏற்ற காராக மஹிந்திரா தார் இருக்கின்றது. அதாவது, ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பு வசதிகளை அக்கார் பெற்றிருக்கின்றது. அணு சித்தாரா இக்காரை புதிதாத வாங்க இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ரொம்ப நாள் காத்திருந்து புதிய காரை வாங்கிய மாலையாள நடிகை... அப்படி என்ன காருங்க அது?.. வாங்க பார்க்கலாம்!

ஏற்கனவே அணு சித்தாராவிடம் சொகுசு வசதிக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி போன்ற சில விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிதாக தன்னுடைய கராஜில் மஹிந்திரா தார் காரை அவர் சேர்த்திருக்கின்றார். சாஃப்ட் டாப் கன்வெர்டபிள் ரூஃப் வசதிக் கொண்ட ஆட்டோ மேட்டிக் தார் எஸ்யூவி தேர்வையே அவர் வாங்கியிருக்கின்றார்.

https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnbtvliveindia%2Fvideos%2F1382883645382097%2F

இந்த வசதிக் கொண்ட தார் ரூ. 12.49 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதில் கூடுதல் சிறப்பு வசதிகளாக, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஆர்எல், அல்லாய் வீல், இஎஸ்பி, ரோல் கேஜ், இரு ஏர் பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actress Anu Sithara Gets New Mahindra Thar Automatic Variant With Soft Top Convertible Roof. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X