துல்கருக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!!

பிரபல மலையாள நடிகை ஒருவர் போர்ஷே நிறுவனத்தின் விலையுயர்ந்த சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்கலாம்.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

போர்ஷே (Porsche) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் 911 கர்ரேரா எஸ் (911 Carrera S)-ம் ஒன்று. இது ஓர் அதி-திறன் வசதிக் கொண்ட சூப்பர் ஸ்போர்ட்ஸ் ரக கார் மாடலாகும். இக்காரையே பிரபல மலையாள நடிகை ஒருவர் வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

மம்தா மோஹன்தாஸ், இவரே போர்ஷே 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் சூப்பர் காரை வாங்கிய நடிகர் ஆவார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகி மற்றும் தயாரிப்பாளர் ஆகிய ரோல்களையும் இவர் ஆற்றி வருகின்றார்.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

ஆகையால், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்த நிலையிலேயே தனது சொந்த பயன்பாட்டிற்காக மம்தா மோஹன்தாஸ் போர்ஷே 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை காரை டெலிவரி எடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி, வைரலாகி வருகின்றன. ஆகையால், இந்த காரை வாங்கிய முதல் பெண் நடிகையாக மம்தா மோஹன்தாஸ் மாறியிருக்கின்றார். மேலும், இது ஒட்டுமொத்த திரையுலகையுமே ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

கவர்ச்சியான மஞ்சள் நிற 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் கார் மாடலுக்கு அருகில் நடிகை மம்தா மோஹன்தாஸ் நிற்பது போன்ற படங்களே தற்போது இணையத்தில் வைரலாகி வெளியாகி இருக்கின்றன. இதனால், மம்தா மோஹன்தாஸின் ரசிகர்கள், இருவரில் யாரை ரசிப்பது என்றே தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பலரின் கனவு வாகனமாக போர்ஷே 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

இந்த கார் இந்தியாவில் ரூ. 1.84 கோடி என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் நான்கு பேர் அமர்ந்து செல்ல முடியும். ஆனால், இரு கதவுகள் வசதியை மட்டுமே இது கொண்டிருக்கின்றது. இத்தகைய ஓர் சிறப்பு தோற்றம் கொண்ட மற்றும் அதிக விலை உடைய காரையே மம்தா மோஹன்தாஸ் தற்போது பயன்பாட்டிற்காக வாங்கியிருக்கின்றார்.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

இந்த கார் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான திறன் மற்றும் அதிக லக்சூரி வசதிகளை வாரி வழங்கும் ஓர் வாகனமாக இருக்கின்றது. கப்பலில் பயணிக்கும் உணர்வை வழங்கக் கூடிய அதிக மிருதுவான இருக்கை, பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலையில் சென்றாலும் சற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தாத சஸ்பென்ஷன்கள் என பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

தொடர்ந்து, பிரீமியம் தர வசதியாக தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அனலாக் டேக்கோமீட்டர், எலெக்ட்ரிக் டூர் ஹேண்டில்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் போர்ஷே 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

மேலும், இக்காரில் சூப்பர் ஃபாஸ்ட் திறனை வெளிப்படுத்துவதற்காக 3.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காரின் பின் பகுதியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது அதிகபட்சமாக 450 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

8 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷனில் இந்த எஞ்ஜின் இயங்குகின்றது. இதன் அனைத்து திறனும் பின் வீலுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 320 கிமீட்டருக்கும் அதிகம் ஆகும். மேலும், இது வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

மிக சிறந்த டைனமிக்ஸ் தோற்றம், எல்இடி புரஜெக்டர் மின் விளக்கு கொண்ட முட்டை வடிவிலான ஹெட்லேம்ப், எஞ்ஜினுக்கு காற்றக் கடத்தக் கூடிய பம்பர் ஆகியவை போர்ஷே 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் காருக்கு கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகையால், இந்திய திரைத்துறையினரை மட்டுமின்றி அதிக கவர்ச்சியான ஸ்போர்ட்ஸ் காரை விரும்பும் தொழிலதிபர்கள் மத்தியிலும் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

துல்கர் சல்மானுக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க!

மலையாள திரையுலகில் பிரபல நடிகர் துல்கர் சல்மானும் இக்காரை பயன்படுத்தி வருகின்றார். அவர் போர்ஷே 911 ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரைப் பயன்படுத்தி வருகின்றார். மியாமி நீல நிறத்திலான இக்காரில் அவர் பல முறை சாலையில் வலம் வந்திருக்கின்றார். அதேநேரத்தில் இதுபோன்ற எண்ணற்ற சொகுசு கார்கள் அவரிடத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actress mamta mohandas takes delivery of porsche 911 carrera s sports car
Story first published: Friday, September 24, 2021, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X