எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

பிரபல Ford நிறுவனம் தனது புகழ்மிக்க கார் மாடலா EcoSport-ஐ இந்தியாவில் இருந்து வெளியேறியதை அடுத்து விற்பனையில் இருந்து விளக்கிக் கொள்வதாக அறிவித்தது. இந்த காரின் விற்பனையை இந்தியாவில் இருந்து மட்டும் நிறுவனம் நிறுத்தவில்லை. வேறொரு நாட்டிலும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் காணலாம், வாங்க.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Ford, இந்திய சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக அண்மையில் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது. இந்த தகவல் இந்திய வாகன உலகிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வெளியேற்றத்தினால் இந்திய வாகன உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

உள் நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என அனைத்திலும் கொடி கட்டி பறந்த ஃபோர்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் இப்படி ஒரு நிலைமையா என அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றனர். இந்த நிலையினால், நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றான ஈகோஸ்போர்ட் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனின் இந்திய தற்போது அறிமுகம் ரத்தாகியிருக்கின்றது. மேலும், விற்பனையில் இருந்தும் இக்காரை விளக்கிக் கொள்வதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு உகந்த வாகனம் ஈகோஸ்போர்ட் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், இருக்கும் பாதுகாப்பு கருவிகளால் மிக பெரிய ஆபத்துகளில் இருந்தும்கூட இதுவரை பலர் தப்பியிருக்கின்றன. இத்தகைய காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனின் இந்திய அறிமுகமே தற்போது ரத்தாகியிருக்கின்றது.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

இந்த ரத்தினை ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் மட்டும் செய்யவில்லை. மேலும் ஓர் நாட்டில் இருந்தும் ஈகோஸ்போர்ட் காரின் வர்த்தகத்தை நிறுவனம் நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் தாய்-நாடான அமெரிக்காவிலேயே ஈகோஸ்போர்ட் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட இருக்கின்றது.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

2022ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரையில் மட்டுமே ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் அமெரிக்காவில் விற்பனையில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் இந்த திடீர் முடிவிற்கு ஈகோஸ்போர்டுக்கு நல்ல விற்பனை கிடைக்காததே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்தியாவில் குறைவான விற்பனையைப் பெற்றதைப் போலவே அமெரிக்காவிலும் மிகக் குறைந்த அளவிலேயே ஈகோஸ்போர்டிற்கான விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

இதன் விளைவாக தனது தாய்நாட்டில் இருந்தும் இக்காரின் விற்பனையை நிறுத்த ஃபோர்டு திட்டமிட்டிருக்கின்றது. நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் மிக குறிப்பானது, நிறுவனம் சந்தையில் நிலையாக இருக்கும் பொருட்டு புதிய தயாரிப்புகளை களமிறக்காததே முக்கிய காரணமாக இருக்கின்றது.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

இதன் விளைவாகவே நிறுவனம் விற்பனையை இழந்து தற்போது நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறியதால் மிக விரைவில் குஜராஜ் சனாந்த் மற்றும் சென்னை ஆகிய இரு பகுதியில் செயல்படும் உற்பத்தி ஆலைகளில் வாகனம் தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட இருக்கின்றன.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

அதேவேலையில் சென்னையில் உள்ள ஆலையில் எந்திரம் உற்பத்தி பணிகளை மட்டுமே மேற்கொள்ள இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஃபோர்டு நிறுவனம் ஈகோஸ்போர்ட் காரை அமெரிக்க சந்தையில் 2016ம் ஆண்டே முதல் முறையாக காட்சிப்படுத்தியது. ஆனால், விற்பனைக்கான அறிமுகத்தை 2018ம் ஆண்டிலேயே நிறுவனம் செய்தது.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

அதேநேரத்தில் இந்தியாவில் இக்கார் 2013ம் ஆண்டில் இருந்தே விற்பனையில் இருக்கின்றது. விற்பனைக்கு களமிறங்கிய புதிதில் இக்காருக்கு நமது நாட்டில் நல்ல அமோகமான வரவேற்புக் கிடைத்தது. புதிய முகங்களின் வரவு மற்றும் போட்டிகள் அதிகரித்தனால் ஈகோஸ்போர்டு விற்பனையில் டல்லடிக்க ஆரம்பித்தது. இதே நிலை பிற மாடல்களிலும் நிலவியதனால் முழுமையாக நாட்டை விட்டு வெளியேறும் நிலையை ஃபோர்டு தழுவியிருக்கின்றது.

எவ்ளோ பெரிய நிறுவனம் Ford... இதுக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த நாட்டிலும் இருந்து வெளியேறுகிறது EcoSport!

ஆண்டிற்கு லட்ச கணக்கில் வாகனங்களை உற்பத்தி செய்து வந்த ஃபோர்டு நிறுவனம் கடந்த சில வருடங்களாக சொற்ப அளவில் மட்டுமே வாகனங்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. அதாவது, ஆண்டிற்கு ஆயிரம் என்ற கணக்கில் மட்டுமே வாகனங்களை நிறுவனம் உற்பத்தி செய்தது. இதில் பெரும்பாலானவே ஏற்றுமதிக்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிகப் பெரிய வீழ்ச்சியும் ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேற முக்கிய காரணமாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
After india ford ecoSport is now all set to be discontinued in united states too
Story first published: Saturday, September 11, 2021, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X