பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

பாதுகாப்பு கவச ஜன்னல்களுடன் ஆல்ஃபா ரோமியோ கியுலியா கார் இத்தலியன் போலீஸ் படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

கராபினேரி எனப்படும் இத்தாலிய இராணுவ பிரிவை சேர்ந்தவர்கள் அந்நாட்டு போலீஸார் உடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். இதற்காக இத்தாலி போலீஸாரின் வாகன படை 1,700 யூனிட்கள் கொண்ட ஆல்ஃபா ரோமியோ கியுலியா கார்களின் முதல் தொகுப்புடன் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

இத்தாலி நாட்டில் தயாரிக்கப்படும் ஆல்ஃபா ரோமியோ கியுலியா கார்கள் துபாய் போலீஸார் பயன்படுத்தும் மற்ற சூப்பர் கார்களை போன்றது கிடையாது. ஆனால் இவையும் போலீஸாரின் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்த மிகவும் ஏற்ற வாகனங்களாகும்.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

ஆல்ஃபா ரோமியோவின் கியுலியா காரில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த சூப்பர் காரை அதிகப்பட்சமாக மணிக்கு 230கிமீ வேகத்தில் இயக்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகவும் நேர்த்தியான தோற்றத்தில் வடிவமைக்கப்படும் ஆல்ஃபா ரோமியோ கியுலியா கார் கருப்பு நிறத்தில் இத்தாலி போலீஸாருக்கு வழங்கப்படவுள்ளது.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

அதேநேரம் கராபினேரி என்ற இத்தாலி இராணுவத்தின் பெயர் ஆங்கிலத்தில் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட, போலீஸாரின் பயன்பாட்டிற்கு தேவையான உபகரணங்களையும் இத்தாலி நாட்டு அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள மேல் உள்ள படத்தில் பார்க்க முடிகிறது.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

இதன்படி மூன்று எச்சரிக்கை விளக்குகள் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய வழக்கமான உபகரணங்களை காட்டிலும் மிக முக்கிய அம்சமாக பி4-நிலை பாதுகாப்பு கவச ஜன்னல் கண்ணாடிகளுடன் இந்த சூப்பர் கார்கள் போலீஸாருக்கு வழங்கப்பட உள்ளன.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

துப்பாக்கி குண்டுகளை காருக்கு உள்ளே செல்ல அனுமதிக்காத இந்த கவச ஜன்னல் கண்ணாடிகள் காரின் முன் கதவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆல்ஃபா ரோமியோ நிறுவனம் பல வருடங்களாக இத்தாலி நாட்டு சட்ட அமலாக்க துறை உடன் இணைப்பில் உள்ளது.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

சுமார் 70 வருடங்களுக்கு முன்பே இத்தாலிய அரசாங்கத்திற்கு 1900 எம் "மட்டா" என்ற ஜீப் ரக வாகனங்களை வழங்கியிருந்த ஆல்ஃபா ரோமியோ இந்த கூட்டணியை தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளது. இத்தாலி மட்டுமின்றி பெரும்பான்மையான நாடுகளில் போலீஸார் சூப்பர் கார்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

பலருக்கு கனவாக இருக்கும் சூப்பர் கார்!! இத்தாலி நாட்டு போலீஸ் படையில் இணைந்தது!

ஏனெனில் தற்போதைய குற்றவாளிக்கு ஏற்ப தாங்களும் அப்டேட்டாக இருக்கவே போலீஸார் விரும்புகின்றனர். குற்றவாளிகள் சூப்பர் கார்களில் செல்லும்போது போலீஸாரும் அவர்களுக்கு ஈடாக பறந்தால் தானே நன்றாக இருக்கும். இதற்கு இத்தாலி போலீஸ் துறை அதன் சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆல்ஃபா ரோமியோ கியுலியா காரை தேர்வு செய்திருப்பது உண்மையில் நல்ல முடிவே.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Alfa Romeo Giulia, with armoured windows, to be part of Italian police force.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X