ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் முற்றிலும் புதிய பஞ்ச் என்ற பெயரிலான காரை வருகிற அக்டோபர் 4ஆம் தேதி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இருப்பினும் அதற்கு முன்னதாக இந்த புதிய டாடா கார் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

இந்த வகையில் டீலர்ஷிப் ஷோரூமிற்கு கொண்டுவரப்பட்ட புதிய டாடா பஞ்ச் கார் ஒன்றின் ஸ்பை படங்கள் டாடா பஞ்ச் ஃபேஸ்புக் குழு ஒன்றின் வாயிலாக இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்க போகின்றோம்.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

இந்த படங்களின் மூலம், உட்புற கேபின் உள்பட இந்த சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி காரை பற்றிய சில விபரங்களை அறிய முடிகிறது. இந்த படங்களில் பழுப்பு- கருப்பு என்ற ட்யுல்-டோன் நிறத்தில் காட்சியளிக்கும் டாடா பஞ்ச் கார் நமக்கு டாடா ஹெரியரை நினைவூட்டுகிறது.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

படங்களில், இந்த புதிய டாடா கார் நேர்த்தியான எல்இடி டிஆர்எல் வரையில் நீட்டிக்கப்பட்ட, பளபளப்பான கருப்பு நிற க்ரில் பகுதியினை கொண்டுள்ளது. இந்த காரில் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் ஆனது முன்பக்க பம்பரின் இரு முனைகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டரில் பிரோஜெக்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

பக்கவாட்டு பகுதியிலும் டாடா பஞ்ச் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டுள்ளது. டாடா நிறுவனம் இந்த மைக்ரோ-எஸ்யூவி ரக காரின் பக்கவாட்டில் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக கருப்பு நிற க்ளாடிங்குகளை வழங்கியுள்ளது. சக்கரங்களுக்கு மேலே சக்கர வளைவுகள் சதுர வடிவில் உள்ளன.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

பக்கவாட்டு பக்கமாக நின்று டாடா பஞ்ச் காரினை பார்க்கும்போது, டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஆண்டென்னா உள்ளிட்டவை காட்சி தருகின்றன. பின்பக்கத்தில் இது டாடா பஞ்ச் கார் என்பதை வெளிக்காட்டும் விதமாக ஏகப்பட்ட லோகோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

இதில் டாடா மோட்டார்ஸ் பிராண்டின் லோகோவிற்கு பின்பக்கத்தில் தான் ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக கேமிரா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், டெயில்லேம்ப்கள் மூன்று-அம்பு டிசைனில் உள்ளன. இந்த படங்களில், பஞ்ச் காரின் உட்புறம் ஆங்காங்கே சில்வர் நிற தொடுதல்களுடன் உள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

குறிப்பாக டேஸ்போர்டில் காரின் மொத்த அகலத்திற்கும் வழங்கப்பட்டுள்ள சில்வர் நிறம் உண்மையில் வெகுவாக வசீகரிக்கிறது. இதன் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரத்தில் ஏகப்பட்ட பொத்தான் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளதை இந்த படங்களில் பார்க்கலாம்.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

அல்ட்ராஸை போன்றதான செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை டாடா பஞ்ச் பெற்று வந்துள்ளது. அதேபோல் ஸ்டேரிங் சக்கரமும் அல்ட்ராஸை தான் ஞாபகப்படுத்துகின்றது. டேஸ்போர்டின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரில் பார்க்க முடியும்.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

டாடா பஞ்ச் காரை பற்றிய விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி கொண்டதாக எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பாகங்கள் மட்டுமின்றி என்ஜின் தேர்வையும் தற்போதைய மாடர்ன் டாடா கார்களில் இருந்தே இந்த மைக்ரோ-எஸ்யூவி மாடல் பெற்றுவரவுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

இந்த வகையில் டாடா டியாகோ, டிகோர் & அல்ட்ராஸ் கார்களில் வழங்கப்படுகின்ற 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பஞ்ச் மாடலில் தொடரப்படலாம். அதிகப்பட்சமாக 86 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே ஆரம்பத்தில் வழங்கப்படும்.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

அதனை தொடர்ந்து கூடுதல் டிரான்ஸ்மிஷன் தேர்வாக 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் எதிர்காலத்தில் வழங்கப்படலாம். அதுமட்டுமின்றி, புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வும் இந்த புதிய டாடா காரில் அறிமுகப்படுத்தப்படலாம் என இப்போதில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. விற்பனையில் டாடா பஞ்ச் மாடலுக்கு மாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்டவை முக்கிய போட்டி மாடல்களாக விளங்கவுள்ளன.

ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கும் புதிய டாடா பஞ்ச்!! மிக விரைவில் அறிமுகம்!

இவ்வாறு புதிய கார்களை அறிமுகப்படுத்துவதற்கு இடையில் வாகனங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில் டாடா நிறுவன அதிகாரிகள் தமிழக முதல்வரை சந்தித்தது, மூடப்படும் நிலையில் உள்ள சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை கைபற்றுவதற்கான பேச்சுவார்த்தை என செய்திகள் வெளிவந்தன.

Most Read Articles
English summary
Tata Punch micro SUV: Clear new pictures reveal all.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X