அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்களின் வரிசையில் மேலும் சில விலையுயர்ந்த கார்கள் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

இந்தியாவின் முதன்மை பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வாகனங்களின் அணிவகுப்பில் புதிதாக சில விலையுயர்ந்த கார்கள் இணைத்ததாக மிக சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜி63 மாடல் சொகுசு கார்களையே இதற்காக களமிறக்கப்பட்டிருந்தன.

அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

இந்த நிலையில், தனது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக மேலும் சில விலையுயர்ந்த கார்களை அவர்கள் கடந்த ஆண்டில் கொள்முதல் செய்திருந்ததாகவும், அந்த கார்கள் வரிசையாக முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு டெலிவரி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

அவ்வாறு, முகேஷ் அம்பானியிடத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் விலையுயர்ந்த மற்றும் லக்சூரிகள் என்னென்ன என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்:

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் 2019ம் கல்லினன் காரை வாங்கிய முதல் இந்தியர் அம்பானி மட்டுமே ஆவார். சேப்பிள் நிறத்திலான கல்லினன் காரையே இவர் வாங்கியிருந்தார். இந்த நிலையிலேயே இரண்டவாதாக புதிய கல்லினன் காரையும் இவர்களது குடும்பத்தினர் வாங்கியிருக்கின்றனர். இது ஆர்க்டிக் வெள்ளை நிறத்திலான கல்லினன் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

இந்த காரையே முகேஷ் அம்பானியின் அன்டில்லா பகுதியில் சிலர் கண்டதாகக் கூறப்படுகின்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை தற்போதும் இணையத்தில் காண முடியும். இந்த சொகுசு எஸ்யூவி ரக கார் சுமார் 7 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. எந்தவொரு கஸ்டமைசேஷனும் இன்றி இந்த உச்சபட்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றது. கூடுதலாக சொகுசு வசதிகள் சேர்க்கப்படுமானால் இதன் விலை இன்னும் சில கோடியைத் தொட்டுவிடும்.

பென்ட்லீ பென்டேகா புதுப்பிக்கப்பட்ட மாடல்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி சொகுசு காரைத் தொடர்ந்து அம்பானியின் குடும்பத்தினர் பென்ட்லீ பென்டேகா காரையும் வாங்கியிருக்கின்றனர். இது 2021 மாடல் லக்சூரி காராகும். இதனை கடந்த ஆண்டின் இறுதியிலேயே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த குடும்பத்திடம் ஏற்கனவே பென்ட்லீ நிறுவனத்தின் குறிப்பிட்ட சில கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

2021 பென்ட்லீ பென்டேகா கார் சுமார் ரூ. 4 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. அம்பானி குடும்பத்தினர் வாங்கியிருக்கும் காரின் துள்ளியமான விலை பற்றிய தகவல் தெரியவரவில்லை. இது வி8 டீசல் எஞ்ஜின் கொண்ட பென்ட்லீ பென்டேகாவாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

இந்த கார் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகமாகாத நிலையிலேயே அம்பானி குடும்பத்தினர் வாங்கியிருக்கின்றனர். விரைவில் இக்கார் இந்தியாவில் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மஸராட்டி லெவன்டே:

மஸராட்டி லெவன்டே ஓர் லக்சூரி எஸ்யூவி ரக காராகும். இந்த காரின் 2021 மாடலையே முகேஷ் அம்பானி குடும்பத்தினர் புதிதாக பயன்பாட்டிற்காக வாங்கியிருக்கின்றனர். இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சொகுசு கார்களில் இதுவும் ஒன்றே. இந்த காரையே மிக சமீபத்தில் முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லத்தின் முன்பு சிலர் கண்டிருக்கின்றனர்.

அம்பானியின் கான்வாயில் இணைந்த 3 புதிய சொகுசு கார்கள்... ப்பா... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது...

நள்ளிரவு நேரத்திலேயே இக்காரை பார்த்திருக்கின்றனர். விரைவில் இக்காரில் பகலில் தரிசனம் அளிக்கலாம் என நம்பப்படுகின்றது. 2021 மஸராட்டி லெவன்டே கார் 2 கோடி ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த காரின் அறிமுகமும் மிக விரைவில் இந்தியாவில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ambani Family Got Few More Luxury SUVs Recently. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X