என்ன இந்த விலையுயர்ந்த கார் மும்பை போலீஸ் கையிலா! இதோட விலை, சிறப்புகள் என்ன தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

விலையுயர்ந்த மற்றும் பிரீமியம் வசதிகளை மிக அதிகளவில் கொண்டிருக்கும் எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி காரில் மும்பை போலீஸார் பயணிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

எம்ஜி நிறுவனத்தின் விலையுயர்ந்த காராக குளோஸ்டர் எஸ்யூவி இருக்கின்றது. டாடா சஃபாரி, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு என்டீயோவர் உள்ளிட்ட ஜாம்பவான் கார்களுக்கு போட்டியாக குளோஸ்டர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நாட்டில் தானியங்கி வசதியுடன் விற்பனைக்கு வந்த முதல் காரும் இதுவே ஆகும்.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

இந்த பிரீமியம் தர எஸ்யூவி காரில் படிநிலை 1 தானியங்கி தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது. தானே பார்க்கிங் செய்தல், ஆபத்தான நேரங்களில் தானே பிரேக் பிடித்தல், விபத்தை தானாகவே தவிர்த்தல், தடம் மாறும்போது எச்சரித்தல் மற்றும் அடாப்டீவ் க்ரூஸ் கனட்ரோல் உள்ளிட்ட பிரம்மிப்பூட்டும் வசதிகளை இந்த முதல்நிலை தானியங்கி தொழில்நுட்பம் வழங்குகின்றது.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

இதுபோன்ற செம்மையான வசதிகளை கொண்டிருப்பதால் இந்திய பிரீமியம் தர கார் விரும்பிகளை குளோஸ்டர் எஸ்யூவி வெகுவாகக் கவர்ந்து வருகின்றது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட காரையே மும்பை போலீஸார் தற்போது பயன்படுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

காரை பயன்படுத்தும் காவலர்கள் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் ஆவார். இவர்களின் பயன்பாட்டிற்காகவே பன்முக சிறப்பு வசதிகள் கொண்ட எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி வாங்கப்பட்டிருக்கின்றது.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

அதாவது, தனது கான்வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் பயன்பாட்டிற்காக இந்த காரை முகேஷ் அம்பானி களமிறக்கியிருக்கின்றார். இந்த காரை காவலர்கள் கான்வாயில் பயன்படுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களே தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகியிருக்கின்றது.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

நாட்டின் மாபெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி என்பதால் அரசு இவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இசட் ப்ளஸ் பாதுகாப்பை வழங்குகின்றது. ஆகையால், நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு இணையாக பாதுகாப்பான கான்வாயை முகேஷ் அம்பானியின் பயணங்களின்போது காணலாம்.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

சொல்லப் போனால் முக்கிய தலைவர்களின் கான்வாயில் இருப்பதைக் காட்டிலும் பல விலையுயர்ந்த மற்றும் பாதுகாப்பான கார்களை இவரின் கான்வாயில் காணலாம். ஏற்கனவே இவரது கான்வாயில் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி போன்ற கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

இந்த நிலையிலேயே புதிதாக இக்கான்வாயில் எம்ஜி குளோஸ்டர் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த கார்கள் சாலையை அதிர வைக்கும் வகையில் அணிவகுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை சிஎஸ் 12 விளாக்ஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

எம்ஜி குளோஸ்டர் காரில் பாதுகாப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் அக்காரில் முதல்நிலை (லெவல் 1) தானியங்கி வசதி சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர இன்னும் சில சிறப்பம்சங்களும் அக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

12.3 இன்ச் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன்), ஐ-ஸ்மார்ட் இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் 8 அங்குல இரு அனலாக் டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் (எம்ஐடி திரையுடன்) வழங்கப்பட்டுள்ளது.

Image Courtesy: CS 12 VLOGS

தொடர்ந்து, வயர்லெஸ் சார்ஜர், 3 விதமான க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகள், 360 டிகிரியில் சுழலும் கேமிரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் எம்ஜி குளோஸ்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

அடேங்கப்பா இந்த காரையும் வாங்கிட்டாங்களா? மும்பை போலீஸ் பயணித்த காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?.. தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!

இதுபோன்ற பன்முக சிறப்பு பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால் சற்று அதிக விலையுடன் குளோஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி ரூ. 29.98 லட்சம் முதல் ரூ. 35.38 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இத்தகைய விலையுயர்ந்த காரிலேயே அம்பானியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மும்பை போலீஸார் பயன்படுத்தியிருக்கின்றனர்.

Most Read Articles

English summary
Ambani Security Convoy Newly Gets MG Gloster Luxury SUV. Read In Tamil.
Story first published: Friday, June 25, 2021, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X