சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

சித்தூரில் புதிய டயர் தொழிற்சாலையை அப்பல்லோ நிறுவனம் அமைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் பகுதியில் அப்பல்லோ டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து முதல் பேட்ஜ் டயர்கள் கடந்த மே 25ம் தேதி வெளிவந்துள்ளன. சித்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை உலக அளவில் பார்த்தால், அப்பல்லோ டயர் நிறுவனத்தின் 7வது தொழிற்சாலை ஆகும்.

சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

அதே சமயம் இந்திய அளவில் பார்த்தால் இது அந்த நிறுவனத்தின் 5வது தொழிற்சாலை ஆகும். சின்னபண்டுரு என்ற கிராமத்தில், அப்பல்லோ டயர் நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 256 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

சித்தூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஆரம்ப கட்டத்தில் 3,800 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கு அப்பல்லோ டயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 12-18 மாதங்களில் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி திறனை படிப்படியாக அதிகரிப்பதற்கும் அப்பல்லோ டயர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

இதன்படி 2022ம் ஆண்டிற்குள், ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் பயணிகள் கார் டயர்களையும், 3 ஆயிரம் லாரி டயர்களையும் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் டயர்களுக்கான தேவை படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக, இந்த புதிய தொழிற்சாலை செயல்படும்.

சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

இந்தியாவில் வர்த்தக வாகனங்களுக்கான டயர்களை விற்பனை செய்வதில் அப்பல்லோ டயர் நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வர்த்தக வாகனங்களுக்கான டயர்களில் 60 சதவீத டயர்கள் அப்பல்லோ டயர் நிறுவனத்துடையது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

இந்த சூழலில் சித்தூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலை டயர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும். அத்துடன் சந்தையில் அப்பல்லோ நிறுவனத்தின் நிலையை வலிமையாக்குவதிலும் இந்த சித்தூர் தொழிற்சாலை முக்கியமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அப்பல்லோ டயர் நிறுவனம் தனது நிலைமையை வலிமையாக்கி கொள்வதற்கு இந்த புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலை அடித்தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி கொண்டுள்ளது.

சித்தூரில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்தது அப்பல்லோ... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடா?

கடந்த சில மாதங்களாகவே இந்த பிரச்னையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை முடிந்த பிறகு டயர்களுக்கான தேவை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்வதில் சித்தூர் அப்பல்லோ தொழிற்சாலை முக்கிய பங்காற்றும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Apollo Opens New Tyre Manufacturing Plant In Andhra - Here Are All The Details. Read in Tamil
Story first published: Saturday, May 29, 2021, 8:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X