2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

ஆடி இந்தியா நிறுவனம் அதன் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இ-ட்ரானை வருகிற ஜூலை 22ஆம் தேதி அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

இந்த நிலையில் தற்போது இ-ட்ரான் & இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் என்ற இரு விதமான உடற் அமைப்புகளில் இந்த இ-எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இந்த ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

இதில் இ-ட்ரான் மாடல் 50, 55 என்ற இரு வெர்சன்களில் கிடைக்கவுள்ளது. அதேநேரம் ஸ்போர்ட்பேக் தோற்றத்திலான இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் மாடல் 55 வெர்சனில் மட்டுமே கிடைக்குமாம். ஆடி இ-ட்ரான் 50 வெர்சனில் 71 கிலோவாட்ஸ் பேட்டரி தொகுப்பு இயக்க ஆற்றலை வழங்குவதற்காக பொருத்தப்பட உள்ளது.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

எலக்ட்ரிக் மோட்டாரில் அதிகப்பட்சமாக 308 பிஎச்பி மற்றும் 540 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பேட்டரி தொகுப்பின் மூலம் 264 கிமீ-இல் இருந்து 379கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

அதாவது இந்த 71 கிலோவாட்ஸ் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 379கிமீ வரையில் பயணிக்கலாம். இ-ட்ரான் 55 வெர்சனில் இதனை காட்டிலும் சற்று பெரியதான 95 கிலோவாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட உள்ளது.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

இது அதிகப்பட்சமாக 402 பிஎச்பி மற்றும் 664 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலையும், 359கிமீ-இல் இருந்து 484கிமீ வரையிலான ரேஞ்ச்சையும் வழங்கக்கூடியது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

இந்த இரு வெர்சன்களிலும் அனைத்து-சக்கர-ட்ரைவ், அட்வான்ஸான ஸ்டேரிங் சக்கரம், அடாப்டிவ் காற்று சஸ்பென்ஷன், 4-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மாட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள் நிலையாக வழங்கப்படவுள்ளன.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

இந்த முழு-எலக்ட்ரிக் ஆடி காரில் நேரடி மின்னோட்டம்/ மாறுதிசை மின்னோட்ட சார்ஜிங் துளைகள் முன்பக்க ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ளன. 11 கிலோவாட்ஸ் மாறுதிசை வீட்டு மின்சாரத்தை உபயோகித்து இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை முழுவதுமாக 8.5 மணிநேரத்தில் சார்ஜ் ஏற்றிவிடலாமாம்.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

அதேநேரம் 150 கிலோவாட்ஸ் வரையிலான விரைவு நேரடி மின்சார சார்ஜரை பயன்படுத்தினால் இதன் பேட்டரியை வெறும் அரை மணிநேரத்தில் முழுவதுமாக நிரப்பிவிடலாம். இரு மாடல்களில் இ-ட்ரானை அறிமுகப்படுத்தவுள்ளது குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி பல்பிர் சிங் தில்லோன் பேசுகையில், ஸ்போர்ட்பேக் எஸ் 5 உடன் இ-ட்ரான் மாடலின் ஒட்டுமொத்த வரிசையையும் இரு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

2 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனைக்கு வரும் ஆடியின் முதல் எலக்ட்ரிக் கார்!! எது மலிவானது?

இந்த மூன்று இ-ட்ரான் மாடல்களை வைத்து இந்தியாவில் முதன்முதலாக கார் வாங்க உள்ளவர்களையும், எலக்ட்ரிக் கார் பக்கம் வர இருப்போரை கவர்வதையும், நாட்டில் ஆடம்பர மின்சார கார் இயக்கத்தின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம் என்றார்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi, the German luxury car manufacturer, is set to start its electric journey in India with the launch of the Audi e-tron on July 22, 2021. To give customers the widest range within the luxury EV segment, Audi India will offer the Audi e-tron in two body styles – Audi e-tron and Audi e-tron Sportback. Audi e-tron buyers will further have the choice of the Audi e-tron 50 and Audi e-tron 55. The Audi e-tron Sportback will be available in the e-tron 55 variant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X