முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

ஆடி இ-ட்ரான் மின்சார கார் அறிமுக தேதி விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

சொகுசு தயாரிப்பாளரான ஆடி நிறுவனத்தின் முதல் மின்சார கார் இ-ட்ரான். இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காரையே இந்தியாவில் நிறுவனம் களமிறக்க இருக்கின்றது. இதன் அறிமுக தேதி வெளிவராத நிலையில், தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

ஜூலை 22ம் தேதி ஆடி இ-ட்ரான் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த மின்சார கார் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பென்ஸ் இக்யூசி மின்சார காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கின்றது.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

ஆடி இ-ட்ரான் ஏற்கனவே இந்திய ஷோரூம்களில் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்பே வெளியாகின. அதில், ஷோரூம்களில் ஆடி இ-ட்ரான் மின்சார கார் கம்பீரமாக நிற்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

இந்த நிலையிலேயே மின்சார காரின் அறிமுக தேதியை சொகுசு கார் தயாரிப்பாளர் ஆடி உறுதிப்படுத்தியுள்ளது. இன்னும் இக்காரின் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. அறிமுக தினத்தின்போதே அதுகுறித்த தகவல்கள் வெளியாக இருக்கின்றன. இதேபோன்று, காருக்கான முன் பதிவும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

ஆடி இ-ட்ரான் உலக நாடுகள் சிலவற்றில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு சில மாதங்களே ஆகின்றநிலையில் இதுவரை 17,641 யூனிட் ஆடி இ-ட்ரான் மின்சார கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

இந்தளவிற்கு அமோக வரவேற்பை ஆடி இ-ட்ரான் மின்சார கார் உலக நாடுகளில் பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே இந்திய மின்சார வாகன சந்தையையும் ஒரு கை பார்க்கும் விதமாக வருகின்ற ஜூலை 22ம் தேதி அக்கார் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

ஆடி இ-ட்ரான் மின்சார காரை கடந்த ஆண்டின் இறுதியில்தான் நிறுவனம் அப்டேட் செய்தது. புதுப்பித்தலின் அடிப்படையில் 71.2 kWh பேட்டரி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 190 கிமீ வேகத்தில் இயங்கக் கூடிய மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும்.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 282 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை 340 கிமீ தூரம் வரை ரேஞ்ஜை உயர்த்த முடியும் என ஆடி தெரிவித்துள்ளது. இந்த கார் வெறும் 6.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

முதல் மின்சார கார் அறிமுக தேதியை வெளியிட்டது ஆடி... பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்க தயார்!!

ஆடி நிறுவனம் இ-ட்ரான் மின்சார காரை ரூ. 1.30 கோடி எனும் விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதி நவீன சொகுசு வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் இது விற்பனைக்கு வர இருப்பதால் இந்த உச்சபட்ச விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi e-Tron India Launch Date Reveald. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X