ஆடி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்... விரைவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், சாதாரண நிறுவனங்கள் மட்டுமின்றி, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

ஆடி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இக்யூசி எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. அந்த காருக்கு அதிக வரவேற்பு கிடைத்தததை பார்த்து, ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் காரை கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, வால்வோ நிறுவனமும் தனது வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற எலெக்ட்ரிக் காரையும், விரைவில் கொண்டு வர இருக்கிறது.

ஆடி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

ஆனால், முதலாவதாக அறிவித்த ஆடி கார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை கொரோனாவால் தள்ளிப் போட்டு வந்தது. இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக டீசர்களை இந்தியாவில் வெளியிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது.

ஆடி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

தற்போது இ-ட்ரான் காரை விற்பனைக்கு கொண்டு வரும் விதமாக, தனது இந்திய இணையதளத்தில் விபரங்களுடன் பட்டியலிட்டுள்ளது. புதிய ஆடி இ-ட்ரான் எஸ்யூவி கார் வடிவமைப்பில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், க்ரில் அமைப்புடன் வசீகரிக்கிறது.

ஆடி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் 20 அங்குல லைட்வெயிட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் சிறப்பான ஏரோடைனமிக்ஸை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆடி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

புதிய ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரின் இன்டீரியரும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இரண்டு பெரிய டிஜிட்டல் திரைகளுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆடி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரின் இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் வீதம் இரண்டு மின் மோட்டார்கள் உள்ளன. இதன் பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் இணைந்து 402 பிஎச்பி பவரையும், 664 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் டாப் ஸ்பீடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆடி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் இருக்கும் 95kWh பேட்டரித் தொகுப்பை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். 11kw சார்ஜர் மூலமாக 8.5 மணிநேரத்தில் இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற்ற முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has listed e-tron electric SUV in Indian website and it is expected to launch very soon.
Story first published: Thursday, May 27, 2021, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X