பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்துள்ள காரியம் சிரிப்பை வரவழைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

சீனாவை சேர்ந்த நிறுவனங்கள், உலகில் மிகவும் பிரபலமாக உள்ள வாகனங்களை அப்படியே காப்பியடித்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை சீன நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனால் பாகிஸ்தானில் ஒரு சில சீன நிறுவனங்கள் நேரடியாக தங்களது வாகனங்களை விற்பனை செய்கின்றன.

பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

அப்படி பாகிஸ்தானில் விற்பனையாகும் சீன நிறுவனங்கள் பெரும்பாலான வாகனங்கள் காப்பி அடிக்கப்பட்டவை ஆகும். இந்த வகையில் மற்ற தயாரிப்புகளை காப்பியடித்து பாகிஸ்தானில் விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு சீன நிறுவனத்தின் தயாரிப்பு பற்றிதான் இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ளோம்.

பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

சீனாவை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று பெயிக். பெரிய நிறுவனங்கள் பலவற்றின் வாகனங்களை இந்த நிறுவனம் காப்பியடித்துள்ளது. இந்த நிறுவனம் பெயிக் பிஜே40 ப்ளஸ் என்ற பெயரில் ஒரு காரை விற்பனை செய்து கொண்டுள்ளது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் மஹிந்திரா தார் மற்றும் பொலிரோ ஆகிய இரண்டு கார்களும் மிகவும் பிரபலமாக உள்ளன.

பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

இந்த இரண்டு கார்களையும் கலந்து உருவாக்கியதை போல், பெயிக் பிஜே40 ப்ளஸ் காட்சி தருகிறது. அத்துடன் மற்ற நிறுவனங்களின் கார்களையும் காப்பியடித்து பெயிக் பிஜே40 ப்ளஸ் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இதன் க்ரில் ஜீப் நிறுவன ஸ்டைலில் உள்ளது. அதே நேரத்தில் ஹெட்லேம்ப் டிசைன், பழைய தலைமுறை லேண்ட்ரோவர் எஸ்யூவிக்களில் இருப்பதை போல் உள்ளது.

பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

அத்துடன் இதன் பக்கவாட்டு டிசைன், ஜீப் ராங்லரை போன்று இருக்கிறது. அலாய் வீல்கள் கூட ஜீப் நிறுவன வாகனங்களில் இருப்பதை போன்று உள்ளது. அதே நேரத்தில் வெளிப்புறத்தில் உள்ள க்ரோம் பூசப்பட்ட ரியர்வியூ மிரர்கள், பழைய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில் இருந்ததை போன்று இருக்கிறது. பின் பகுதியில் ஜீப் ராங்லருக்கும், பெயிக் பிஜே40 ப்ளஸ் எஸ்யூவிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

டெயில்லேம்ப்கள், டெயில்கேட் டிசைன், டெயில்கேட் உடன் இணைக்கப்பட்ட ஸ்பேர் வீல் ஆகியவை ஜீப் ராங்லரை போலவே இருக்கின்றன. பல்வேறு கார்களை காப்பியடித்து டிசைன் செய்யப்பட்டிருந்தாலும், பெயிக் பிஜே40 ப்ளஸ் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 12.3 இன்ச் முழு எல்சிடி டிரைவர் டிஸ்ப்ளேவை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.

பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

இது டிரைவருக்கு பல்வேறு தகவல்களை வழங்கும். இதுதவிர இந்த எஸ்யூவியில் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முந்தைய தலைமுறை மாடலை போன்று உள்ளது. அதே சமயம் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின் பகுதியில் ஏசி வெண்ட்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ளன.

பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

இந்த எஸ்யூவியில், 250 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 2.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
BAIC BJ40 Plus Is A Mix Of Mahindra Thar, Bolero And Jeep Wrangler. Read in Tamil
Story first published: Monday, May 31, 2021, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X