இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60 ஆயிரம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தக்க பாடத்தை காவல்துறை புகட்டியுள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதுனு இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

கொள்ளை நோய் கொரோனா வைரஸ் உலகத்தை மீண்டும் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் கோவிட்19 வைரஸ் அதன் புதிய தாண்டவமாட்டத்தை ஆட தொடங்கியுள்ளது. இதன் இரண்டாம் இலை பரவலைத் தாங்க முடியாமல் நாட்டின் அனைத்து மாநிலங்களும் கதற தொடங்கியிருக்கின்றன.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நாடே திக்குமுக்காடி வருகின்றது. ஆங்காங்கே, ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆம்புலன்ஸ் ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்

இதுமட்டுமின்றி அதன் ஓட்டுநரையும் பெங்களூரு நகர காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இறந்தவரின் உடலை தகணத்திற்கு எடுத்து செல்ல மிக அதிக கட்டணத்தை கேட்ட குற்றத்திற்காக போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின்கீழ் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது காவல்துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்திருக்கின்றனர். இவர் ஓர் இளம்பெண்ணிடம் அவரது இறந்த தந்தையின் சடலத்தை தகணத்திற்கு எடுத்து செல்ல ரூ. 60 ஆயிரம் வரை கேட்டதாகக் கூறப்படுகின்றது.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

இதுகுறித்த புகாரளிக்கப்பட்ட நிலையிலேயே காவல்துறையினர் அதிரடியாக உயிர்காக்கும் உன்னத வாகனம் என்றும் பாராமல் ஆம்புலன்ஸையும், அதன் டிரைவரையும் கொத்தாக தூக்கியிருக்கின்றனர்.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் பவ்யா (29). இவரது தந்தை தனியார் மருத்துவமனை ஒன்றில் கோவிட்-19 வைரசுக்கான சிகிச்சை பலனின்றி கடந்த 20ம் தேதி அன்று அவர் காலமானார். இதனையடுத்து, உடலை தகணம் செய்ய வேண்டும் என்பதற்காக அம்ருதஹள்ளியில் இருந்து பீன்யாவிற்கு ஆம்புலன்ஸ் வாயிலாக எடுத்து செல்ல பவ்யா திட்டமிட்டார்.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

இதற்காக தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனமான ஹனுமன் ஆம்புலன்ஸின் உதவியை அவர் நாடினார். இதனடிப்படையில் இருவர் ஆம்புலன்சுடன் மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் உடலை ஏற்றி செல்ல ரூ. 60 ஆயிரம் கேட்டிருக்கின்றனர். மிக அதிகம் என்பதால் சற்று குறைத்து வாங்கிக் கொள்ளுமாறு பவ்யா அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தார்.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

ஆனால், சற்றும் இறங்கி வராத ஓட்டுநர்கள் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் சடலத்தை நடு ரோட்டில் இறக்கி வைத்துவிட்டு நாங்கள் புறப்பட்டுவிடுவோம் என கராறாக கூறியிருக்கின்றனர். இதனால் அதிர்ந்துபோன பவ்யா, உடனடியாக அவசர உதவி எண் 100ஐ தொடர்பு கொண்டார்.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

நிலைமை மோசமாவதை உணர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரும், அவருடன் வந்தவரும் கடைசியாக ரூ. 16 ஆயிரத்திற்கு சடலத்தை எடுத்து செல்ல ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில்தான் பவ்யா கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (வியாழன்) ஆம்புலன்ஸையும் அதன் டிரைவரையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

"நாடே பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவித்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அனைவரும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எனவேதான் இரக்கமற்ற முறையில் நடந்துகொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது" என அம்ருதஹள்ளி காவல்நிலையத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

இது இக்கட்டான சூழ்நிலையைக் காரணம் காட்டி அதிகம் பணம் பறிக்க முயலும் கொள்ளையர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். பெங்களூருவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாட தொடங்கியது முதல் தங்களின் கொள்ளையடிக்கும் வேலையை சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தொடங்கிவிட்டனர்.

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ரூ. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்... வேற லெவல் நடவடிக்கை எடுத்த போலீஸ்!!

Source: The New Indian Express

அத்தகையோரின் வயிற்றில் காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை புளியை கரைக்கத் தொடங்கிவிட்டது. இதன் வாயிலாக நகரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பது கணிசமாக குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பு: மூன்றாவது படத்தை தவிர பிற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டை ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bengaluru Police Seized Private Ambulance; Here Is Why?.. Raed In Tamil.
Story first published: Saturday, April 24, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X