2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

2021 மாடல் பென்ட்லீ பென்டேகா காரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் பிறி முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

பிரபல சொகசு கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லீ, அதன் மறு-சீரமைப்பு செய்யப்பட்ட (புதுப்பிக்கப்பட்ட) பென்டேகா கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக லக்சூரி மற்றும் சிறப்பு வசதிகளைக் கொண்ட இக்காருக்கு ரூ. 4.10 கோடி என்ற உச்சபட்ச விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

புதுப்பிக்கப்பட்ட பென்டேகா காரின் அறிமுகத்தைத் தொடர்ந்து டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பென்ட்லீ சொகுசு கார் விற்பனையாளர்கள் இக்காருக்கான புக்கிங் பணியைத் தொடங்கியிருக்கின்றனர். தற்போது அறிமுகமாகியிருக்கும் பென்டேகா காரில் கணிசமான சில மாற்றங்களை பென்ட்லீ செய்திருக்கின்றது.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

காரின் வெளிப்புற, உட்புறம் என அனைத்திலும் லேசான மாற்றங்களை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இந்த மாற்றங்கள் பென்டேகாவின் அழகை சீர்குலைத்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்யிருக்கின்றது பென்டேகா. ஆகையால், புதிய மாற்றங்கள் இக்காரின் கவர்ச்சியை மேலும் மெருகேற்றும் வகையிலேயே அமைந்திருக்கின்றது.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

முன்பக்க க்ரில், வட்ட வடிவில் இருக்கும் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் உடல் பகுதியில் இடம் பெற்றிருக்கும் லைன் ஆகிய கூறுகளில் லேசான அப்டேட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது பென்டேகா காரை கூடுதல் கட்டுமஸ்தான வாகனமாக மாற்றியமைக்க உறுதுணையாக அமைந்திருக்கின்றது. இதுபோன்று மாற்ற வேலைபாடுகளே காரின் பின்புறத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

அந்தவகையில், இக்காரில் வி8 மோட்டார் பொருத்தப்பட்டிருப்பதைக் குறிக்கக் கூடிய எழுத்துக்கள், முட்டை வடிவத்திலான மெல்லிய இழை போன்ற எல்இடி டெயில் மின் விளக்குகள், இரட்டை வெளியேற்றும் (எக்சாஸ்ட்) குழாய்கள் ஆகிய அம்சங்கள் புதுப்பித்தலைச் சந்தித்திருக்கின்றன.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

காரின் உட்பகுதி; பென்டேகாவின் மனம் மயக்கக் கூடிய பகுதிகளில் பென்டேகா காரின் உட்பகுதியும் ஒன்று. இதனை தெள்ளத் தெளிவாக காட்டும் வகையில் 10.9 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்சிஸ்டம், இருக்கைகள் மற்றும் பிற தொழில்நுட்ப பொத்தான்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளைக் கொண்டது.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

இத்துடன், மை பென்ட்லீ இணைப்பு தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. பென்டேகா காரில் 4.0 லிட்டரிலான ப்யூவல் கஸ்லிங் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 542 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸில் இயங்கும்.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

இந்த கார் வெறும் 4.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. கடந்த ஆண்டு பென்ட்லீ நிறுவனம் அதிகம் விற்பனைச் செய்த கார் மாடல்களில் பென்டேகா காரும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 பென்ட்லீ பென்டேகா சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... விலைய மட்டும் கேட்றாதீங்க மயக்கமே வந்திடும்...

பல கோடி மதிப்புள்ள இக்காரை உலகளவில் சுமார் 20 ஆயிரம் யூன்டுகள் வரை பென்ட்லீ நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த வரவேற்பை மேலும் அதிகரிக்கச் செய்கின்ற வகையிலேயே தற்போது இதன் புதுப்பிக்கப்பட்ட மாடலை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

Most Read Articles

மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley Launches 2021 Bentayga In India At Rs. 4.10 Crore. Read In Tamil.
Story first published: Tuesday, March 16, 2021, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X