கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

கார்கள் தயாரிப்பில் 2,00,000 என்ற மைல்கல்லை வெற்றிக்கரமாக பெண்ட்லீ நிறுவனம் கடந்துள்ளது. இந்த லக்சூரி கார் தயாரிப்பு நிறுவனம் கடந்து வந்துள்ள பாதையை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

உலகளவில் பிரபலமன லக்சூரி கார் பிராண்ட்களுள் ஒன்றான பெண்ட்லீ முதன்முதலாக 1919ல் நிறுவப்பட்டது. இந்த வகையில் பார்த்தோமேயானால், சுமார் 101 வருடங்கள் பழமையானது இந்த பிராண்ட்.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

இத்தனை வருடங்களில் ரேஸ் ட்ராக் மற்றும் பொது சாலைக்கு என வெவ்வேறு விதமான கார் மாடல்கள் பெண்ட்லீயின் அடையாளத்தை போற்று விதத்தில் வெளிவந்துள்ளன. இதனால் இந்த நிறுவனத்தால் தற்போது 2,00,000 என்ற மைல்கல்லை கார்களின் தயாரிப்பில் கடக்க முடிந்துள்ளது.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

இங்கிலாந்தில் தலைமை இடத்தை கொண்டு செயல்படும் பெண்ட்லீ பிராண்டில் இருந்து ப்ளோவர், அர்னேஜ், முல்சேன் மற்றும் காண்டினெண்டல் ஜிடி என பல பிரபலமான கார்கள் இதுவரையில் விற்பனைக்கு வெளிவந்துள்ளன.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

இதில் பெண்ட்லீயின் விற்பனைக்கு ஆக்ஸலரேட்டர் கொடுத்த காண்டினெண்டல் ஜிடி மாடல் முதல் கச்சிதமான மாடர்ன் பெண்ட்லீ காராக 2003ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னரே பெண்ட்லீ கார்களின் விற்பனை மிகவும் சூடுப்பிடித்தது என்று கூற வேண்டும்.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

ஏனெனில் அதற்கு முன்பு வரையில் (கிட்டத்தட்ட 85 வருடங்கள்) 50 ஆயிரத்திற்கும் குறைவான பெண்ட்லீ கார்களே தயாரிக்கப்பட்டு இருந்தன. 2003ஆம் ஆண்டிற்கு பிறகே சுமார் 1,55,582 கார்களை தயாரித்து பெண்ட்லீ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

தற்சமயம் காண்டினெண்டல், ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் பெண்டைகா என்ற மூன்று மாடல்களை பெண்ட்லீ உலகளவில் விற்பனை செய்து வருகிறது. இவை மூன்றும் இங்கிலாந்தில், செஷயர் பகுதியில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

இதில் பெண்டைகா கார் மட்டும் தான் ஒரே ஒரு பெண்ட்லீ காராக இந்தியாவில் விற்பனையில் உள்ளது. 7 விதமான நிறங்களில் விற்பனைக்கு பெண்ட்லீ பெண்டைகாவின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.1 கோடியாக உள்ளது.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

இங்கிலாந்து தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 85 கார்களை தயாரிக்கும் பெண்ட்லீயின் 2 லட்சமாவது கார் என்ற சிறப்பை சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள பெண்டைகா ஹைப்ரீட் கார் பெற்றுள்ளது.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

இந்த சிறப்புமிக்க தருணத்தை கொண்டாடும் விதமாக பழமையான பெண்ட்லீ கார்கள், நீண்ட காலமாக நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு நினைவுக்கூறுவதற்காக தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கார் தயாரிப்பில் 2,00,000ஐ கடந்தது பெண்ட்லீ!! இந்தியாவில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ கார்கள் எத்தனை தெரியுமா?

மற்ற நிறுவனங்களை போல் பெண்ட்லீயும் எதிர்காலத்தில் பேட்டரி பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் கார்களை உருவாக்கவே திட்டமிட்டுள்ளது. நமக்கு தெரிந்தவரையில் 2030க்குள் முழு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக பெண்ட்லீ மாறிவிடும்.

Most Read Articles
மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
BENTLEY CELEBRATES MANUFACTURING MILESTONE OF 200,000th LUXURY CAR.
Story first published: Tuesday, March 30, 2021, 1:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X