தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு!

சொகுசு கார் உற்பத்தியாளரான பென்ஸ் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு! என்னென்ன தரவுகள் கசிந்திருக்கு தெரியுமா?

சொகுசு வாகன தயாரிப்பில் உலகளவில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் நிறுவனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ்-ம் ஒன்று. இந்த நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தரவுகளே தவறுதலாக வெளியாகியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு! என்னென்ன தரவுகள் கசிந்திருக்கு தெரியுமா?

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதனால், தகவல் வெளியாகியதாகக் கருதப்படும் வாடிக்கையாளர்கள் மோசடிக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது. பென்ஸ் அமெரிக்கா நிறுவனமே இந்த தவறை இழைத்திருக்கின்றது.

தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு! என்னென்ன தரவுகள் கசிந்திருக்கு தெரியுமா?

கிளவுட் ஸ்டோரேஜ் வாயிலாக தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளை பென்ஸ் பராமரித்து வருகின்றது. இதில் இருந்தே தவறுதலாக வாடிக்கையாளர்களின் சுய விவரங்கள் கசிந்திருக்கின்றன. இதனால், இதுவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என பென்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு! என்னென்ன தரவுகள் கசிந்திருக்கு தெரியுமா?

குறிப்பாக, வாடிக்கையாளர்கள் யாரும் எந்தவொரு கசப்பான தீங்குகளையும் சந்திக்கவில்லை என அது கூறியுள்ளது. ஜனவரி 2014 மற்றும் ஜூன் 2017 ஆகிய காலங்களில் தாமாக முன் வந்து தங்களின் விவரங்களை சேமித்து வைத்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களின் தகவலே தற்போது கசிந்திருக்கின்றது.

தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு! என்னென்ன தரவுகள் கசிந்திருக்கு தெரியுமா?

இந்த வாடிக்கையாளர்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என அறிவித்த பென்ஸ், தற்போது அவர்களுக்கு ஆறுதல் பரிசுகளை அறிவித்திருக்கின்றது. அதாவது, கிரெடிட் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்கள் கசியப்பட்டிருக்கம் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் இலவச சந்தா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு! என்னென்ன தரவுகள் கசிந்திருக்கு தெரியுமா?

பென்ஸ் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் எஸ் க்ளாஸ் சொகுசு செடான் ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சிபியூ வாயிலாக இந்த கார் இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. புதிய எஸ் க்ளாஸ் சொகுசு காரை பென்ஸ் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதமே சர்வதேச விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது.

தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு! என்னென்ன தரவுகள் கசிந்திருக்கு தெரியுமா?

ஆனால், இந்தியாவில் கடந்த ஜூன் 17ம் தேதி அன்றே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ரூ. 2.17 கோடி என்ற ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எஸ் 400டி 4மேட்டிக் மற்றும் எஸ் 450 4மேட்டிக் என இரு விதமான தேர்வுகளில் எஸ் க்ளாஸ் சொகுசு செடான் விற்பனைக்குக் கிடைக்கும்.

தற்செயலா கசிஞ்சிடுச்சாமா! பென்ஸ் வாடிக்கையாளர்களின் முக்கிய தரவுகள் வெளியானதால் பரபரப்பு! என்னென்ன தரவுகள் கசிந்திருக்கு தெரியுமா?

இந்த காரில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஏராளமான சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்களைக் கவரும் வகையில் சொகுசு வசதிகள் எக்கசக்கமாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Benz USA Accidentally Outs Sensitive Data Nearly 1,000 Customers. Read In Tamil.
Story first published: Tuesday, June 29, 2021, 12:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X