50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

புல்லட் ப்ரூஃப், அதிகபட்ச உஷ்னத்தை தாங்கும் திறன், 2.3 டன் எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்லும் திறன் என எக்கசக்க வசதிகளுடன் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கல்யாணி எம்4 ரக வாகனம் தயாராகி வருகின்றது.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

பாரத் ஃபோர்ஜ் லிமிடெட், புனேவே மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய பன்னாட்டு நிறுவனம். இந்த நிறுவனத்திடமே கல்யாணி எம் 4 ரக வாகனங்களைப் பெறுவதற்கான அவசர ஆர்டரை இந்திய ராணுவம் வழங்கியிருக்கின்றது. இதுகுறித்து புனேகர் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய கல்யாணி எம்4 வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்காக ரூ. 177.95 கோடி மதிப்பிலான ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

இந்திய ராணுவத்திடம் இருந்து இந்த ஆர்டர் கிடைத்திருப்பதை பாரத் ஃபோர்ஜ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. எதிரி நாடுகளால் இந்தியாவிற்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், ராணுவத்தைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுத்து வருகின்றது.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

அந்தவகையில் சமீபத்தில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது கல்யாணி எம்4 ரக வாகனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் பன்முக திறன் கொண்ட வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

குறிப்பாக எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் இது பயணிக்கும். தண்ணீர் நிறைந்த ஏரி, குளம் குட்டை ஆகியவற்றைக் கூட இது மிக சுலபமாகக் கடக்கும். தொடர்ந்து, வெடி மருந்துகள் நிறைந்த சாலையைக்கூட இவ்வாகனம் அசால்டாக கடக்கும் என கூறப்படுகின்றது. இத்தகைய திறன்களை இவ்வாகனம் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்திய ராணுவம் கல்யாணி எம்4 மாடலைத் தேர்வு செய்திருக்கின்றது.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

இந்த வாகனத்தில் மொத்தமாக 8 பேர் வரை அமர்ந்து செல்ல முடியும். இதுமட்டுமின்றி, 2.3 டன் வரையிலான எடையுள்ள பொருட்களை (ஆயுதங்களை) இது ஏற்றிச் செல்லும். மேலும், அசௌகரியத்தை ஏற்படுத்தாத இருக்கைகள் இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியும்.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

கல்யாணி எம்4 வாகனத்தில் பயணிக்கும்போது எதிரிகள் துப்பாக்கு சூடு நடத்தினாலோ அல்லது வெடிகுண்டு மழையை பொழிய செய்தாலோ உள்ளே இருக்கும் வீரர்கள் யாருக்கும் எதுவும் ஆகாது. துப்பாக்கு குண்டுகள் துளைக்காத அடர்த்தியான உலோகங்களே இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

தொடர்ந்து, புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கண்ணாடிகளும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால், மிக பாதுகாப்பான பயணத்த வீரர்களால் மேற்கொள்ள முடியும். கல்யாணி எம்4 ஓர் இரு அறை கொண்ட வாகனம் ஆகும். இதன் உயரம் 2,450மிமீ மற்றும் அகலம் 2,600 மிமீட்டராக இருக்கின்றன.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

கல்யாணி எம்4 வாகனம் அதிகபட்சமாக 20 டிகிரி முதல் 50 டிகிரி வரையிலான வெப்பத்தைத் தாங்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகையால், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பினைகூட இந்த வாகனம் மிக அசால்டாக கடந்துவிடும். இத்தகைய அனல் பறக்கும் பகுதியில் வாகனம் சென்றாலும்கூட அதில் இருக்கும் பயணிகளுக்கு எதுவுமே ஆகாது என்பதுதான் கூடுதல் சிறப்பு தகவலாக இருக்கின்றது.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

வாகனத்தின் அதிக இயங்கு திறனுக்காக டர்போசார்ஜட் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 465 எச்பி திறனை வெளியேற்றக் கூடியது. ஆகையால், எதிரிகள் ஓடி ஒளிய நினைத்தால்கூட மிக வேகமாகச் சென்று இந்திய வீரர்களால் அவர்களைச் சிறைபிடிக்க முடியும்.

50 டிகிரி வெப்பத்தை கூட அசால்டாக சமாளிக்கும்... இந்திய ராணுவத்திற்காக தயாராகும் கல்யாணி எம்4 வாகனம்...

Source: Punekarnews

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ என கூறப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டிருக்கும் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்பினால் சுமார் 800கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சிறப்பு திறன்கள் கொண்ட வாகனத்தையே இந்திய ராணுவம் வாங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bharat Forge Gets Order From Indian Army To Supply Kalyani M4 Vehicles. Read In Tamil.
Story first published: Saturday, March 20, 2021, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X