Just In
- 5 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 7 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 44 min ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
கபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..!
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் டைட்டில் வின்னர் வாங்கிய புத்தம் புதிய கார்.. இந்தியாவில் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்கணும்!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் புதிய கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா மற்றும் இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்வு ஒளிபரப்பாகி வருகின்றது. சீசன் 4 பிக்பாஸ் நிகழ்வு மிக சமீபத்தில் நிறைவடைந்தநிலையில் தற்போது சீசன் 5க்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் தமிழ் பிக்பாஸ் குழு களமிறங்கியிருக்கின்றது. இதிலும், கமலே நடுவராக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டின் வெற்றியாளர் ஒருவர் மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக வாகனங்களில் ஒன்றான தார் எஸ்யூவி காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி பிக்பாஸ் வீட்டின் சீசன் 13இன் வெற்றியாளர் ஆர்த்தி சிங், இவரே புதிய காரை வங்கியவர் ஆவார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணா அபிஷேக்-கின் தங்கையாவார். தனது தங்கை புதிய கார் வாங்கியதற்காக கிருஷ்ணா அபிஷேக் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார். இத்துடன், புதிய காருடன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் சமூக வலை தளம் வாயிலாக அவர் பகிர்ந்திருக்கின்றார்.

தொடர்ந்து, இந்த புதிய காரை யாருடைய உதவியுமின்றி ஆர்த்தி வாங்கியிருப்பதாக பெறுமிதத்துடன் அவர் கூறியிருக்கின்றார். மஹிந்திரா தார் எஸ்யூவி ரூ. 12,10,338 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், எல்எக்ஸ் எனும் உயர்நிலை வேரியண்டை ஆர்த்தி சிங் தற்போது வாங்கியிருக்கின்றார். இதன் விலை ரூ. 14.15 லட்சம் ஆகும்.

மஹிந்திரா தார் எல்எக்ஸ் வேரியண்ட், ஹார்ட்டாப் வசதிக் கொண்டது. மேலும், இது ஓர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட வாகனமும்கூட. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட காரையே ஆர்த்தி சிங் பிறரின் உதவியின்றி வாங்கியிருக்கின்றார். இதுவே, பிக்பாஸ் வீடு 13 வெற்றியாளரின் முதல் காராகும்.

இந்தியாவில் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்று வரும் எஸ்யூவி ரக கார்களில் தார் மாடலும் ஒன்று. எனவேதான் இக்காருக்கான காத்திருப்பு காலம் மிக அதிகமாக மாறியிருக்கின்றது. இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் 2022ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.

இத்தகைய சிறப்பு காரையே பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆர்த்தி சிங் நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர் தற்போது வாங்கியிருக்கின்றார். முன்பு ஆஃப்-ரோடர் வாகனமாக விற்பனைக்குக் கிடைத்து வந்த தார், தற்போது குடும்பத்தினருடன் பயணிக்கக் கூடிய வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், குடும்பத்துடன் பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ஏற்ப வசதிகளுடன் புதிய தலைமுறை தார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. எனவேதான் தற்போது இக்காருக்கு இந்தியாவில் அபரிதமான விற்பனை கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக கணிக்க முடியாத வகையில் காத்திருப்பு காலம் நீண்டிருக்கின்றது.

தொடர்ந்து, குடும்ப வாகனம் என்ற அவதாரத்தை தார் பெற்றிருக்கின்ற காரணத்தினால், இதற்கேற்ப பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், சொகுசு வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அனைவரும் சொகுசு அமர்ந்து செல்லும் வகையில் அதிக இடைவெளியுடன் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஆகையால், கால்களை இடைஞ்சலின்றி வைத்துக் கொண்டு பயணிக்க முடியும். இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் தார் விற்பனைக்கு வந்திருப்பதால் ஆஃப்ரோடு பயண பிரியர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி இதன் விலையும் சற்று குறைவு என்பதால் மக்கள் அமோகமான வரவேற்பை இக்காருக்கு வழங்கி வருகின்றனர்.