பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டும் கேட்காதீங்க!!

மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஷிவானி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

சின்னத்திரை தொடர்கள் (சீரியல்கள்) வாயிலாக இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்த நடிகை ஷிவானி. இவர் நாடகங்களைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் வாயிலாக இளைஞர்கள் பலரின் மனதை கவரும் வாய்ப்பை அவர் பெற்றார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் இவர் ஹீரோயினாக நடித்திருக்கின்றார்.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

நடிப்பில் மட்டுமின்றி சமூக வலை தளங்களில் இவர் ஆக்டிவாக காணப்படுகின்றனர். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் துடிப்பாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை அவர் கிறங்கடித்து வருகின்றார். ஆகையால், சமூக வலைதளத்தில் இவருக்கு பின் தொடர்பவர்கள் மிக மிக அதிகம்.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

இந்த நிலையிலேயே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டார். இதன் பின்னர் பின்தொடர்பவர்கள் இன்னும் அதிகமாகினார். இவர்களை கவரும் விதமாக தொடர்ச்சியாக தன்னைக் குறித்த அப்டேட்டுகளை அவர் அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார்.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

அந்தவகையில், தான் வாங்கியிருக்கும் புது கார்குறித்த தகவலை அவர் தற்போது இன்ஸ்டா செயலி வாயிலாக தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். 'இதுதான் என்னுடைய பீஸ்ட்' என்று கூறி அப்படத்தை அவர் பகிர்ந்திருக்கின்றார். ஷிவானி வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 7சீரிஸ் ரக காராகும்.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

இந்த பதிவிற்கு ஷிவானியுடன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரூம் மேட்டாக இருந்தாக ரம்யா பாண்டியன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து ஷிவானியின் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் இந்தியாவில் ரூ. 1.38 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

இது வெறும் ஆரம்ப நிலையில் இருக்கும் கார் மாடலின் விலை மட்டுமே ஆகும். இதன் உச்ச தேர்விற்கு ரூ. 2.46 கோடி என்ற அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல், பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என மூன்று விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

ஆகையால், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் சொகுசு வசதிகளை அதிகம் விரும்புவோர் மத்தியில் இந்த கார் மவசு அதிகம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது பயணங்களுக்கான புதிய வாகனமாக ஷிவானி பிஎம்டபிள்யூ 7சீரிஸ் காரை வாங்கியிருக்கின்றார்.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட சொகுசு காராக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காட்சியளிக்கின்றது. லேசர் ரக எல்இடி ஹெட்லைட்டு, பகல்நேர எல்இடி மின் விளக்குகள், எல்இடி வால்பகுதி மின்விளக்குகள் ஆகியவை இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுடன், இந்த கார் மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கின்றது.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

ஏன், நம்ம பிக் பாஸ் புகழ் ஷிவானி அருகில் நிற்கும் அவரைவிட மிகவும் கவர்ச்சியான மற்றும் வசீகரிக்கும் வகையில் அந்த கார் காட்சியளிக்கின்றது. இந்த காரில் பிரீமியம் வசதிகளும் ஏராளம். அந்தவகையில், பனோரமீக் சன்ரூஃப், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் லோடிங் சில், பார்கிங் அசிஸ்டண்ட் ப்ளஸ், ஸ்கை லான்ச் எனப்படும் சிறப்பு மின் விளக்கு அலங்காரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

தொடர்ந்து, 12.3 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10.25 இன்சிலான தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஒயர்லெஸ் சார்ஜர், அடாப்டீவ் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் பிஎம்டபிள்யூ 7சீரிஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், சொகுசான பயணத்திற்கு இந்த கார் நூறு சதவீத உத்தரவாதம் வழங்கும் என்பது எந்த சந்தேகமும் இல்லை.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காரின் இருக்கைகளில் மசாஜ் வசதி, பின் பக்க பயணிகளுக்கான திரை, ஆம்பிசியன்ட் ஏர் பேக் மற்றும் மின் விளக்கு என கூடுதல் சிறப்பு வசதிகளும் 7 சீரிஸில் வழங்கப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க சொகுசு காரையே தற்போது ஷிவானி வாங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இவர் வாங்கியிருக்கும் 7சீரிஸ் காரின் அதிகாரப்பூர்வ விலை பற்றிய தகவல் வெளியாகியவில்லை.

பிக்பாஸ் புகழ் ஷிவானி வாங்கிய மிக மிக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்... அதோட ரேட்டை மட்டுமே கேட்காதீங்க!!

தற்போது ஷிவானிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் ரம்யா பாண்டியன் மிக சமீபத்திலேயே ஓர் சொகுசு காரை வாங்கினார். அவர் வாங்கியதும் ஓர் பிஎம்டபிள்யூ காராகும். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜிடி சொகுசு காரையே அவர் வாங்கினார். இது ஓர் பிஎம்டபிள்யூ 5 செரீஸ் கிராண் டூரிஸ்மோ மாடலின் பழைய தலைமுறை வெர்ஷனாகும். இதனையே ரம்யா பாண்டியன் வாங்கினார். இந்த சொகுசு கார் இந்தியாவில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இக்காரை ரம்யா என்ன விலையில் வாங்கினார் என்பது தெரியவரவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Big boss season 4 contestant shivani narayanan buys bmw 7 series luxury car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X