தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்

காரின் முன் பக்கத்தையே விழுங்கக்கூடிய உருவம் கொண்ட உறை பனி கார் மீது விழும் ஷாக் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்!

பார்க் செய்த காரில் அமர்ந்திருக்கும்போது அப்படி என்ன நடந்துவிடபோகுது?.. இப்படி அசால்டாக கேட்கக் கூடிய நபர்களுக்கு பதிலளிக்கும் வகையில், 'என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்பதை உணர்த்தும் விதமாக ஓர் விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்!

பார்க் செய்யப்பட்ட காரின்மீது உறைந்த பனி கட்டி விழும் காட்சிகளே தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்க் செய்யப்பட்டிருந்த அந்த காரில் ஏற்கனவே ஓர் இளம் பெண் அமர்ந்திருக்க, அவரைத் தொடர்ந்து, டிரைவர் இருக்கைக்கு அருகில் இருக்கும் மற்றுமொரு இருக்கையில் அமர்வதற்காக இளைஞர் ஒருவர் நுழைகின்றார்.

தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்!

அவர் நுழைந்த ஒரு சில விநாடிகளிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறிவிடுகின்றது. காரின் முன்பக்க கண்ணாடி (விண்ட்ஷீல்டு) மீதே உறைந்த பனி கட்டி விழுந்திருக்கின்றது. இளைஞர், காரின் கதவை முழுமையாக மூடுவதற்கு முன்னரே இந்த நிகழ்வு அரங்கேறிவிடுகின்றது.

தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்!

இதனால், அதிர்ச்சியுற்ற இளைஞர், உடனடியாக காரை விட்டு வெளியேறினார். இவரைத் தொடர்ந்து, காருக்குள் ஏற்கனவே அமர்ந்திருந்த பெண்ணும் வெளியேறி விடுகின்றார். அந்தநேரத்தில் கூடுதல் ஷாக்களிக்கும் வகையில், கார் மட்டும் தானாக நகர தொடங்கியது.

தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்!

பனி கட்டி விழுந்த அதிர்ச்சியில் காரை ஸ்டார்ட் செய்தவாறு இளம்பெண் இறங்கியிருக்கின்றார். மேலும், ஹேண்ட் பிரேக்கையும் அவர் ரிலீஸ் செய்திருக்கின்றார். இதனால், தானாக நகரத் தொடங்கிய அந்த கார் அருகில் இருந்த கட்டிடடத்தின் சுற்று சுவரில் மோதி நின்றிருக்கின்றது. இச்சம்பவம்குறித்த பரபரப்பை ஏற்படுத்தும் காட்சிகளை லேட்பைபிள் எனும் தளம் வெளியிட்டிருக்கின்றது.

தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்!

நல்ல வேலையாக இவ்விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. ஆனால், காருக்கு மட்டும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கின்றது. பனி கட்டி விழந்ததாலும், கார் தானே நகர்ந்து சென்று மோதியதாலும் வாகனத்தின் முன் மற்றும் பின் பக்கங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்!

நம்ம ஊர்ல இதுபோன்று பிரச்னை ஏதும் ஏற்படாது என்றாலும் சற்று கவனமாக இருப்பது மிக சிறந்தது. குறிப்பாக, மழை காலங்களில், மரங்களுக்கு அருகில் அல்லது கீழே வாகனங்களை பார்க் செய்து விட்டு இவ்வாறு அமர்வது ஆபத்தானது. அதிக காற்று போன்றவற்றால் சில நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தலைக்கு வந்தது விண்ட்ஷீல்டோடு போனது! பிரமாண்ட உறை பனி கார்மீது விழும் ஷாக் வீடியோ... மயிரிழையில் தப்பிய இளைஞர்!

இதற்கான எடுத்துக்காட்டாகவே இந்த விபத்து சம்பவம் அமைந்திருக்கின்றது. காரின் மீது விழுந்து நொறுங்கிய உறை பனி சுமார் 100 கிலோவிற்கும் அதிகம் இருக்கும் என கூறப்படுகின்றது. இது நேரடியாக வேறு யார் மீதாவது விழுந்திருந்தால் நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கும். அதிர்ஷ்டவசமாக இதுபோன்ற எந்த கசப்பான நிகழ்வும் அங்கு அரங்கேறவில்லை.

அர்ஜென்டினாவின் ரமோஸ் மெஜியா எனும் நகரத்திலேயே இவ்விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இங்கு தற்போது கடும் பனி காலம் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. ரயில் பாதை, சாலைகள், விமான ஓடுதளம் என அனைத்தையும் உறைந்த பனிகளே அதிகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இந்த நிலையிலேயே மிக சமீபத்தில் இவ்விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Huge Ice Block Falls 50 Feet On Car Windshield; Viral Video. Read In Tamil.
Story first published: Thursday, April 1, 2021, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X