பென்ஸ் காரை வாங்கிய சில நாட்களிலேயே தார் காரை வாங்கிய நடிகை... ரொம்ப காத்திருந்து வாங்கியிருக்காங்க!

பிரபல நடிகை ஒருவர் வெகு நாட்கள் காத்திருந்து தார் எஸ்யூவி காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பென்ஸ் காரை வாங்கிய சில நாட்களிலேயே தார் காரை வாங்கிய நடிகை... ரொம்ப காத்திருந்து வாங்கியிருக்காங்க!

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக காராக தார் எஸ்யூவி இருக்கின்றது. இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இக்காருக்கு சுமார் 10 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருகின்றது.

பென்ஸ் காரை வாங்கிய சில நாட்களிலேயே தார் காரை வாங்கிய நடிகை... ரொம்ப காத்திருந்து வாங்கியிருக்காங்க!

அதாவது, இப்போது மஹிந்திரா தார் எஸ்யூவி காரை புக் செய்தால் பத்து மாதங்கள் வரை காத்திருந்து பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாநிலம்-நகரம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபட்டு காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே பிரபல துணை நடிகை ஒருவர் இக்காரை புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பென்ஸ் காரை வாங்கிய சில நாட்களிலேயே தார் காரை வாங்கிய நடிகை... ரொம்ப காத்திருந்து வாங்கியிருக்காங்க!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஹிமாஜா. இதற்கு முன்பிலிருந்தே இவர் திரைத்துறையில் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பின்னரே அதிக புகழ் பெற்றவராக அவர் மாறினார். முன்னதாக திரைத்துறையில் ஹீரோயின்களுக்கு அடுத்தபடியாக, நண்பர், விருந்தினர் போன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கின்றார்.

பென்ஸ் காரை வாங்கிய சில நாட்களிலேயே தார் காரை வாங்கிய நடிகை... ரொம்ப காத்திருந்து வாங்கியிருக்காங்க!

மேலும், டிவி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். இருப்பினும், பிக்பாஸ் நிகழ்ச்சியே இவருக்கு கை கொடுத்துள்ளது. இதற்கு பின்னரே புதிய வீடு, பென்ஸ் கார் என வளர்ச்சியின் அடுத்தக் கட்டத்திற்கே நகர்ந்துள்ளார், ஹிமாஜா. இந்த நிலையிலேயே தற்போது புதிதாக மஹிந்திரா எஸ்யூவி காரை தான் வாங்கியிருப்பதாக சமூக வலைதளம் வாயிலாக அவர் தகவல் தெரிவித்திருக்கின்றார்.

பென்ஸ் காரை வாங்கிய சில நாட்களிலேயே தார் காரை வாங்கிய நடிகை... ரொம்ப காத்திருந்து வாங்கியிருக்காங்க!

மிக சமீபத்தில்தான் இவர் சிவப்பு நிறத்திலான பென்ஸ் சொகுசு காரை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிதாக மஹிந்திரா தார் எஸ்யூவி காரை அவர் வாங்கியிருக்கின்றார். தற்போது, தார் எஸ்யூவி காருக்கு நாடு முழுவதும் அதிக டிமாண்ட் நிலவி வருவதால் இக்காரை அவர் சில மாதங்கள் காத்திருந்து பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பென்ஸ் காரை வாங்கிய சில நாட்களிலேயே தார் காரை வாங்கிய நடிகை... ரொம்ப காத்திருந்து வாங்கியிருக்காங்க!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம், தற்போது வரை தார் எஸ்யூவி காரை புக் செய்யும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சில மாதங்கள் காத்திருப்பு பின்னரே அக்காரை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பென்ஸ் காரை வாங்கிய சில நாட்களிலேயே தார் காரை வாங்கிய நடிகை... ரொம்ப காத்திருந்து வாங்கியிருக்காங்க!

எனவேதான் நடிகை ஹிமாஜாவும் தார் எஸ்யூவி காரை காத்திருந்து பெற்றிருப்பார் என கூறப்படுகின்றது. தார் எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 9 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய விலையுயர்ந்த காரையே புதிதாக பிக்பாஸ் புகழ் ஹிமாஜா வாங்கியிருக்கின்றார்.

மஹிந்திரா தார் எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என இரு எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. தார் எஸ்யூவி ஓர் 4 நட்சத்திர ரேட்டிங் பெற்ற பாதுகாப்பான கார் என்பது கூடுதல் சிறப்பான தகவல்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bigg Boss Stardom Himaja Buys Brand New Mahindra Thar. Read In Tamil.
Story first published: Saturday, June 5, 2021, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X