"அப்பாவே போய்ட்டாரு, என்னடா பண்றீங்க"... மருத்துவமனைக்குள் காரை சொறுகி அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக தலைவர்...

தனது அப்பா கோவிட்-19 வைரசால் இறந்த காரணத்திற்காக மருத்துவமனை வலாகத்திற்கு காரை ஓட்டி பாஜக பிரமுகர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலில் உயிர் சேதங்கள் அதிகளவில் தென்படுகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை, தீவிர தொற்று உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர். இதனால், இந்தியா மிக துயரமான சூழ்நிலையில் சிக்கியிருக்கின்றது.

தொடர் மரணங்களால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கொரோனாவால் பாதித்த தனது தந்தையை காப்பாற்ற தவறிவிட்டதாகக் கூறி பாஜக கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின்மீது அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றார்.

கொரோனா வைரசுக்கு எதிராக செயல்புரியும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் போடப்பட்டு வருகின்றன. இப்பணியை துரிதப்படுத்தும் பணியில் நாடே மும்மரமாக இயங்கி வருகின்றது. வயது மற்றும் அத்தியாவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வைரசுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

வைரசிடம் இருந்து பாதுகாப்பதற்காக இத்தடுப்பூசிப் போடப்பட்டாலும், ஒரு சிலர் தடுப்பூசியை எடுத்த பின்னரும் வைரஸ் தொற்றால் மீண்டும் பாதிக்கப்படுவதாக ஆங்காங்கே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. இதற்கு வைரசின் உருமாறும் தன்மையே முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி தனது தந்தை உயிரிழந்ததற்கு மருத்துவமனை ஊழியர்கள் மிக கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கின்றார் பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாஷிக் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர தஜ்னே. மாநிலத்தின் பாஜக கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களில் இவரும் ஒருவர். இவருடைய மனைவி சீமா தஜ்னேவும் இக்கட்சியின் மிக முக்கியமான உறுப்பினர். இவரே மிக சமீபத்தில் பைட்கோ எனும் தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று அவரது தந்தையை சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

சிகிச்சைக்காக சேர்த்தபோதே அவர் அதிக தொற்றுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இறவே அவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கின்றார். இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத பாஜக பிரமுகர், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது மிகக் கடுமையாக நடந்துக் கொண்டிருக்கின்றார்.

மேலும், தனது பிராண்ட் நியூ டொயோட்டா இன்னோவா காரைக் கொண்டு மருத்துவமனை கீழ் தளத்தை சுக்கு-நூறாக நொருக்கி அவரது ஆத்திரங்களை தீர்த்திருக்கின்றனர். தொடர்ந்து, மருத்துவமனை பணியாளர்கள் சிலர் மீதும் கொலை வெறி தாக்குதலில் அவர் ஈடுபட்டிருக்கின்றார்.

ராஜந்திர தஜ்னேவின் இந்த அத்துமீறல் செயல் நாஷிக் பகுதியில் மட்டுமின்றி மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அத்துமீறல் சம்பவத்தின்போது பாஜக பிரமுகர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே மருத்துவமனை நிர்வாகம் பாஜக பிரமுகரின் அத்துமீறல் செயல்குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. முன்னதாக காவல்நிலையத்திலும் சம்பவம்குறித்து புகார் ஒன்றையும் கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உயிரிழப்புகள் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றது.

நாளொன்றிற்கு ஆயிரக் கணக்கானோர் சிகிச்சை பலனின்றி இறந்து வருகின்றனர். இதற்கு மருத்துவர்களைக் காரணமாக எடுத்துக் கொள்வது மிக தவறானது. ஆகையால், பாஜக பிரமுகர் செய்த இந்த அத்துமீறலுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றது.

மேலும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பலர் தங்களது, குழந்தைகளை தனித்துவிட்டு இரவு, பகல் பாராமல் நோயாளிகளுக்கு உழைத்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் முன்கள பணியாளர்கள் மீது செய்திருக்கும் இந்த அத்துமீறல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அத்துமீறல் காரணமாக பாஜக பிரமுகர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை பிறருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஓட்டியது. முன்களப் பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்பட்டது என பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BJP Leader Rams Toyota Innova Into Hospital: Here Is Why?.. Read In Tamil.
Story first published: Monday, May 17, 2021, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X