அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய பிஎம்டபிள்யூ (BMW) சொகுசு கார்கள் தீயில் எரிந்து நாசமாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சம்பவம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

மும்பை டர்போ எம்ஐடிசி பகுதியில் ஏற்பட்ட ஓர் தீ விபத்து சம்பவத்தில் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொகுசு கார்கள் தீயில் எரிந்து நாசமாகிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி குறைந்தபட்சம் 40க்கும் அதிகமான கார்களாவது தீயிற்கு இரையாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. அனைத்தும் பிஎம்டபிள்யூ (BMW) சொகுசு கார்களாகும். இந்த நிகழ்வு சொகுசு பிரியர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, பிஎம்டபிள்யூ கார் பிரியர்களை இந்த தகவல் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

பிஎம்டபிள்யூ சொகுசு கார் விற்பனையகத்திற்கு சொந்தமான கட்டிடத்திலேயே இந்த தீ விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. கார்கள் நிறுத்தி வைக்கப் பயன்படுத்தப்படும் கராஜ் பகுதியில் தீ விபபத்து ஏற்பட்டதனாலேயே 40க்கும் அதிகமான கார்கள் தீயில் கருகி நாசமாகியிருக்கின்றன.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

இந்த நிகழ்வு செவ்வாய் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அரங்கேறியதாக எம்ஐடிசி தீயணைப்பு குழுவைச் சேர்ந்த முக்கிய அதிகாரியான ஆர்பி பாட்டில் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு குறித்து அவர் கூறியதாவது, "தீ விபத்தினால் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் கருகி நாசமாகியிருக்கின்றன" என்றார்.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

40 முதல் 45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் தீயிற்கு இரையாகியிருக்கும் என மதிப்பிடப்படுவதாகவும் அவர் கூறினார். இதில், ஒவ்வொரு காரும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலனாவை ஆகும். அனைத்தும் பிராண்ட் நியூ கார்கள் ஆகும். இதில், சில கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களும் தீயில் கருகியிருக்கின்றன.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

விபத்தின் முழு இழப்பு பற்றிய விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. மிக விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விபத்து பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் பெரும் போராடியிருக்கின்றனர். ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின்னரே முழுமையாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதற்குள்ளாக கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து பிஎம்டபிள்யூ சொகுசு வாகனங்களும் தீயில் கருகி நாசமாகியிருக்கின்றன.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

இந்த தீ விபத்து சம்பவத்தில் அண்மையில் புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட 220ஐ 'ப்ளாக் ஷாடோ' சிறப்பு பதிப்பு சொகுசு கார் மாடலும் தீயிற்கு இரையாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மிக மிக சமீபத்திலேயே இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மேலும், விற்பனைக்காக ஷோரூம்களுக்கு இக்காரை நிறுவனம் அனுப்பி வைத்தும் வருகின்றது.

அட கொடுமையே... நெருப்புக்கு இரையான BMW சொகுசு கார்கள்! ஒவ்வொன்னும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது!

இந்த நிலையிலேயே தற்போது கராஜில் தீயில் எரிந்து நாசமாகியிருக்கும் கார் மாடல்களில் இதுவும் என சந்தேகிக்கப்படுகின்றது. இச்சிறப்பு பதிப்பு வாகனம் இந்திய சந்தையில் ரூ. 43.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை விற்பனைக்குக் கிடைக்கின்றது. கடந்த நவம்பர் 16ம் தேதி அன்றே இக்கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிற்காக இக்காரின் 24 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Blaze gutted more than 40 brand new bmw cars in navi mumbai
Story first published: Wednesday, December 8, 2021, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X