அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

குறிப்பிட்ட சில பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

பிஎம்டபிள்யூ க்ரூப்பின் இந்த புதிய விலை அதிகரிப்பில் 3 சீரிஸ், 2 சீரிஸ் க்ரான் கூபே, எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 உள்ளிட்ட கார்கள் அடங்குகின்றன.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

இவற்றில் ஆரம்ப நிலை பிஎம்டபிள்யூ செடான் காரான 2 சீரிஸ் க்ரான் கூபேவின் விலை முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூவின் 2 சீரிஸ் க்ரான் கூபே கார்களாக 220டி ஸ்போர்ட்லைன் மற்றும் 220ஐ எம் ஸ்போர்ட் உள்ளன.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

இவற்றின் விலைகள் முறையே ரூ.80,000 மற்றும் ரூ.60,000 உயர்த்தப்பட்டுள்ளன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 220ஐ ஸ்போர்ட் ட்ரிம்-இன் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 3 சீரிஸ் மாடலும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

இதன் பெட்ரோல் வேரியண்ட்களான 330ஐ ஸ்போர்ட்-இன் விலை ரூ.1,00,000மும், 330ஐ எம் ஸ்போர்ட்டின் விலை ரூ.60,000மும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு டீசல் வேரியண்ட்டான 320டி லக்சரி எடிசனின் விலை ரூ.60,000 உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

முன்னதாக வழங்கப்பட்டு வந்த 320டி ஸ்போர்ட் ட்ரிம்-இன் விற்பனை இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எஸ்யூவி கார்களின் பக்கம் வந்தால், சிறிய தோற்றம் கொண்ட எஸ்யூவியான எக்ஸ்1-இன் எஸ்ட்ரைவ் 20ஐ ஸ்போர்ட்.எக்ஸ் மற்றும் எஸ்ட்ரைவ் 20ஐ எக்ஸ்.லைனின் விலைகள் ரூ.1,30,000 மற்றும் ரூ.90,000 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

எக்ஸ்1-இன் டீசல் மாடலான எக்ஸ்ட்ரைவ் 20டி எக்ஸ்.லைன் ரூ.1,10,000இல் விலை அதிகரிப்பை கண்டுள்ளது. எக்ஸ்3 காரின் எக்ஸ்ட்ரைவ் 30ஐ ஸ்போர்ட்.எக்ஸ், எக்ஸ்ட்ரைவ் 30ஐ லக்சரி லைன் மற்றும் எக்ஸ்ட்ரைவ் 20டி லக்சரி லைன் வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.1 லட்சம், ரூ.90,000 மற்றும் ரூ.1,20,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

எக்ஸ்ட்ரைவ் 30ஐ எம் ஸ்போர்ட் எக்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரைவ் 30டி எம் ஸ்போர்ட் எக்ஸ் வேரியண்ட்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்4 கார் விற்கப்பட்டு வருகிறது. இந்த இரு வேரியண்ட்களின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.1 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

அதேபோல் எக்ஸ்5 காரின் இரு டீசல் ட்ரிம்களின் விலைகளும் தலா ரூ.1,00,000 உயர்ந்துள்ளன. இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்டான எக்ஸ்ட்ரைவ் 40ஐ எம் ஸ்போர்ட்டின் விலை மட்டும் ரூ.60,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக ரூ.3.80 லட்சம் வரையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் உயர்ந்தன!!

இவை அனைத்தை காட்டிலும் பிஎம்டபிள்யூவின் பிரதான எஸ்யூவி மாடலான எக்ஸ்7-இன் விலைகள் சுமார் ரூ.3.80 லட்சம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ.2.5 லட்சங்களும், மற்ற இரு டீசல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.2.90 லட்சம் மற்றும் ரூ.3.80 லட்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
BMW India hikes prices up to Rs 3.80 lakh of X7, X5, X1, and 3 Series.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X