இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் புதிய ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் தொடர்பான டீசர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை பெருகி வருவதை அடுத்து புதிய புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தயாராகி வருகின்றன. இதில் பிஎம்டபிள்யூவின் இந்திய சந்தைக்கான முதல் எலக்ட்ரிக் வாகனமான ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியும் ஒன்றாகும்.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் இந்தியாவில் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்தான் தற்போது இந்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவில் காரின் முன்பக்க மற்றும் பின்பக்க ஹெட்லைட்கள் மட்டுமே ஹைலைட்டாக மிக அருகாமையில் காட்டப்பட்டுள்ளன.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

மேலும் இந்த டீசரில், "we are on a course to redefine, how the worls moves." எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், புழுக்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை மறுவரையறை செய்வதற்கான ஒரு போக்கில் நாங்கள் இருக்கிறோம் என்பதாகும். முன்பக்க & பின்பக்க ஹெட்லைட்களை பற்றி கூற வேண்டுமென்றால், ஸ்டைல் & நேர்த்தி.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

பிஎம்டபிள்யூவின் முற்றிலும் புதிய அலுமினியம் ஸ்பேஸ்ஃப்ரேமின் அடிப்படையில் ஐஎக்ஸ் எலக்ட்ரிக் கார் வடிவமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதன் பரிமாண அளவுகளில் தான் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடல் உருவாக்கப்படுகிறது. ஐஎக்ஸ் எலக்ட்ரிக் காரில் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு எலக்ட்ரிக் மோட்டார்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் பொருத்துகிறது.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

சர்வதேச சந்தைகளில் எக்ஸ்ட்ரைவ் 40 மற்றும் எக்ஸ்ட்ரைவ் 50 என்ற இரு விதமான வேரியண்ட்களில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எக்ஸ்ட்ரைவ் 40 வேரியண்ட் 71 kWh பேட்டரி தொகுப்புடன் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரேஞ்ச் 414கிமீ ஆக உள்ளது. அதாவது முழுவதுமாக ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 414 கிமீ தொலைவிற்கு இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரினை இயக்கி செல்லும்.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

இரு எலக்ட்ரிக் மோட்டார்களின் மூலம் 322 பிஎச்பி மற்றும் 630 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெறலாம். எக்ஸ்ட்ரைவ் 50 வேரியண்ட்டில் சற்று ஆற்றல்மிக்க 105.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இது 611கிமீ ரேஞ்ச்சை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த பேட்டரியின் உதவியுடன் அதிகப்பட்சமாக 516 பிஎச்பி மற்றும் 765 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெற முடியும்.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

இந்த வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடலாம். பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி, ஆடி இ-ட்ரான் மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் உள்ளிட்ட மற்ற பிராண்ட்களின் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் போட்டியாக விளங்குகின்றன. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியில் இட்ரைவ் தொழிற்நுட்பத்தின் ஐந்தாம் தலைமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

இது காரின் இரு எலக்ட்ரிக் மோட்டார்களின் மூலமாக செயல்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் கார் அடையாள ‘கிட்னி' வடிவிலான க்ரில், செதுக்கப்பட்டது போன்று நேர்த்தியான வடிவில் முப்பரிமாண பொனெட் பகுதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் நிலையான தேர்வாக 20-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

அதேநேரம் கூடுதல் தேர்வாக 21-இன்ச் மற்றும் 22-இன்ச் தேர்வுகளிலும் அலாய் சக்கரங்கள் வழங்கப்படலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கிய சிறப்பம்சமாக அனைத்து-சக்கர ட்ரைவ் அமைப்பு இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயண சூழலை பொறுத்து முன் சக்கரங்களுக்கும், பின் சக்கரங்களுக்கும் வெவ்வேறான டார்க் திறன்களை வழங்கக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

அதேநேரம் முழுவதுமாக பின் சக்கரங்களில் இயங்கக்கூடிய ஐஎக்ஸ் எலக்ட்ரிக் காரும் உள்ளது. இத்தகைய ஐஎக்ஸ் மாடல்கள் கூடுதல் செயல்திறன்மிக்கவைகளாக விளங்குகின்றன. முழுவதுமாக வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் சிபியூ முறையில் ஐஎக்ஸ் எலக்ட்ரிக் கார்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் களமிறங்க தயாராகும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! புதிய டீசர் வெளியீடு

இவை தவிர்த்து இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் நிர்ணயிக்கவுள்ள எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறித்த விபரங்கல் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில் ஐஎக்ஸ் மாடலின் ஆரம்ப விலையினை ரூ.1 கோடியில் எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 30, 2021, 18:57 [IST]
English summary
Re BMW India teases the iX electric SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+