எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ இன்று (மார்ச் 5) அதன் புதிய எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்யும் முதல் 40 வாடிக்கையாளர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் அங்கிகரீக்கப்பட்ட பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் ரேஸ் ட்ராக்கில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ காரான எம்340ஐ எக்ஸ்ட்ரைவ்-இன் முன்பதிவுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே தயாரிப்பு நிறுவனம் ஏற்று கொள்ளவுள்ளது.

இந்த பிஎம்டபிள்யூ காரில் 3-லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 387 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களை கவரவும், செயல்திறன்மிக்க கார் என்பதை நியாயப்படுத்தவும் எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரில் நீண்ட லிஸ்ட்டில் தொழிற்நுட்ப அம்சங்களை வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது.

இவற்றுடன் பிஎம்டபிள்யூ எம் வரிசை கார்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் டிஃப்ரென்ஷியல், ப்ரேக்குகள் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் புதிய எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் கார் ஏற்றுள்ளது.

காரின் உட்புற கேபினில் 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் மியுசிக் சிஸ்டம் போன்றவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி கார் ஆர்வலர் தொகுப்பு, ரேஸர்களின் தொகுப்பு மற்றும் மோட்டார்ஸ்போர்ட் தொகுப்பு முதலிய ஆக்ஸஸரீ தொகுப்புகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தங்களது எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காரின் தோற்றத்தை மெருக்கேற்றி கொள்ள முடியும்.

பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவு வைப்பு தொகையாக ரூ.1 லட்சம் நிர்ணயிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிஎம்டபிள்யூ செடான் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.70 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








